புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2013


துறைமுக அதிகார சபை இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்: அரச தளங்களை இலங்குவைக்கும் குழு

 அரசாங்கத்தின் இணையத்தளங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், இலங்கை துறைமுக அதிகாரசபையின் இணையத்தளம் செவ்வாய்க்கிழமை உட்புகுந்து தாக்கப்பட்டுள்ளது.
இதே பாணியில் இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகள் இரண்டினதும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தினதும் இணையத்தளங்கள் தாக்கப்பட்டுள்ளன.
இணையத்தளங்கள் மீது தாக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி டேவிட் ஜோன்ஸ் உங்களை தாக்கியுள்ளார். கழுதைகளை வெளியே போட நாம் வருவோம் என்ற செய்தியும் அனுப்பப்பட்டிருந்தது.
1000 மின்னஞ்சல் விலாசங்களையும் இரகசிய கடவுச் சொற்களையும் முறியடித்து ‘ஓர் இலங்கை’ என்னும் அமைப்பின் இணையத்தளத்தை தாக்கியதாக டேவிட் ஜோன்ஸ் கூறியுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இணையத்தளத்தை தாக்கிய டேவி ஜோன்ஸ் அதன் தரவுத்தளத்தை வெளிக்கொண்டுள்ளது.
கடந்தவாரம் தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தாக்கப்பட்டு குழப்பப்பட்டது. இந்த இணையத்தளத்தை தாக்கியவர் கேம் ஓவர் என தன்னை அழைத்திருந்தார்.

ad

ad