புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2013


தமிழர் பகுதிகளுக்கு விரைவில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் – இந்தியா நம்புகிறது?

புதுடெல்லியில் இன்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்துடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற 8வது கூட்டுக்குழுக் கூட்டத்தில் இந்தியாவும் சிறிலங்காவும் இரட்டை வரிவிதிப்பை தவிர்த்தல், அனைத்துலக தீவிரவாதத்துக்கு எதிரான போர், போதைப்பொருள் தடுப்பு ஆகிய மூன்று உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளன.
அத்துடன் திருகோணமலையில் சிறப்பு பொருளாதார வலயத்தையும், மருந்துப் பொருள் மற்றும் ஆடைகள் கொத்தணியையும் சிறிலங்காவில் நிறுவவும் இருநாடுகளும் திட்டமிட்டுள்ளன.
மீனவர்களுக்கு எதிராக வன்முறைகளைப் பிரயோகிப்பதில்லை என்றும் இந்தியாவும் சிறிலங்காவும் இணக்கம் கண்டுள்ளன.
சிறிலங்காவில் இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவவுள்ளது.
அதேவேளை, இன்றைய சந்திப்பின் போது, தமிழர் விவகாரம் குறித்துப் பேசப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார்.
“எதிர்காலத்தில் சிறிலங்காவில் தமிழ்ச்சமூகம் நீதியாகவும், கௌரவமாகவும், சமத்துவமாகவும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுக்கள் தொடர வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.
13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மீதிருந்தும், தேசிய நல்லிணக்கத்தின் மூலமும்,அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஒன்று எட்டப்படும் என்று நாம் நம்புகிறோம்.” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, அடுத்த மூன்று ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை 10 பில்லியன் டொலராக உயர்த்தவும் இன்றைய கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

ad

ad