புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2013



சி.ஏ. தேர்வு :  தமிழக மாணவி தேசிய அளவில் முதலிடம் 
தேசிய அளவில் நடத்தப்பட்ட சி.ஏ. (பட்டய கணக்கர்) தேர்வில் ஆட்டோ டிரைவரின் மகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 


மும்பை மலாட் பகுதியில் வசிப்பவர் ஜெயக்குமார். ஆட்டோ டிரைவரான இவரது பூர்வீகம் தமிழ்நாடு. இவரது மகள் பிரேமா(வயது24). 300 சதுர அடி கொண்ட மிகச்சிறிய வீட்டில் பெற்றோர் மற்றும் சகோதரருடன் வசித்து வரும் பிரேமா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சி.ஏ. தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்.
இந்நிலையில் சி.ஏ. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப் பட்டன. இதில், முதல் முறையாக சி.ஏ. தேர்வு எழுதிய பிரேமா 800-க்கு 607 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்தார். அவரது சகோதரர் தன்ராஜும் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியால் மிகவும் உற்சாகமாக இருக்கும் பிரேமா, தனது பெற்றோர் பள்ளிப் படிப்பைக்கூட தாண்டாத நிலையில் தன்னையும், தன் சகோதரரையும் கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு படிக்க வைத்ததை பெருமையுடன் கூறினார்.

ad

ad