புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2013


அமெரிக்க தீர்மானத்துக்கு பிரித்தானியா ஆதரவளிக்கும் – அலிஸ்ரெயர் பேர்ட்!


இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு பிரித்தானியா ஆதரவளிக்கும் என்று மீண்டும் உறுதிப்படுத்தினார் பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான அமைச்சர் அலிஸ்ரெயர்
பேர்ட். டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், அனைத்துலக மன்னிப்புச்சபை எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் மேலும் பதிலளிக்கையில்,
“அரசியல் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு இலங்கை அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீவிரமான பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று பிரித்தானியா தொடர்ந்து வலியுறுத்தும்.
அரசியல்தீர்வு அடிப்படையானது. அது இலங்கையில் உள்ளவர்களுக்கானது.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டில், பங்கேற்பது குறித்து பிரித்தானியா இன்னமும் தீர்மானம் எதையும் எடுக்கவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad