புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2013


தப்பியோடும் இராணுவத்திற்கு நடக்கும் கெதி 
இலங்கை இராணுவம் ஒரு மனிதநேயமற்ற காட்டு மிராண்டிகளின் கூட்டம் என்பது ஊர் அறிந்த உண்மை. தமிழர்களையும் முஸ்லீம் சகோதரர்களையும் இவர்கள் படுகொலை செய்ததும், இன அழிப்பில் ஈடுபட்டதும் உலகறியும்.
ஆனால் இவர்கள் சிங்கள இளைஞர்களையும் விட்டுவைக்க வில்லை என்பதற்காக சில ஆதாரங்களும் தற்போது வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட இந்த வீடியோ எந்தத் தேதியில் பதிவாகியுள்ளது என்பது தொடர்பான விடையங்கள், கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் தென்னிலங்கையில் உள்ள, இராணுவ முகாம் ஒன்றில், தப்பிச் சென்று பின்னர் பிடிபட்ட மற்றும் மீண்டும் வந்து சரணடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு கிடைக்கும் தண்டனையை தான் ஒரு சக சிப்பாய் தனது மோபைல் போனில் வீடியோவாக எடுத்துள்ளார். 

இது ஒன்றும் பயிற்ச்சி கிடையாது. அங்கே கொடுக்கப்படும் தண்டனைகளை பிறிதொரு அதிகாரியும் மோபைல் போனில் படம் எடுப்பதையும், அடி தாங்க முடியாமல் சில சிப்பாய்கள் அலறுவதும் இங்கே தெளிவாகப் பதிவாகியுள்ளது. குறிப்பாக காணொளியின் இறுதியில், ஒரு சிப்பாய் அடி தாங்கமுடியாமல் கதறுவது பதிவாகியுள்ளது. இராணுவத்தில் கடுமையான சட்ட திட்டங்கள் உண்டுதான் மீறுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் தான். ஆனால் அதற்காக இவ்வாறு காட்டு மிராண்டித்தனமாக ஒருவரை தாக்கும் அதிகாரத்தை இலங்கை இராணுவத்துக்கு யார் கொடுத்தது ? (காணொளி இணைப்பு)


ad

ad