புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2013


தேமுதிகவில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்;
அவர்கள் அதிமுகவுக்க்கு வருவார்கள் :  சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ.,
 
தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல். ஏ.,க்கள், முதல்வர் ஜெயலலிதாவை
சந்தித்து தங்களது தொகுதி மேம்பாட் டிற்கு உதவக்கோரி வருகின்றனர். தலைமையின் அனுமதி பெறாமல் சந்திக்கும் படலத்தை', முதல் முறையாக துவக்கியவர் சுந்தர்ராஜன். அவரை அடுத்து ஆறு எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரை சந்தித்தனர். ஏழாவது நபராக விருதுநகர் எம்.எல்.ஏ., மாபா' பாண்டியராஜன் நேற்று முதல்வரை சந்தித்தார்.

அதிருப்தி எம்.எல். ஏ.,க்கள், அடுத்தடுத்து, முதல்வரை சந்தித்து வருவது குறித்து, சுந்தர்ராஜன்,   ‘’மக்கள், மனசாட்சி, தெய்வத்தை நம்புகிறேன். அரசு விழாக்களில் பங்கேற்கிறோம். முதல்வரின் செயல்பாடு குறித்து மனதாரப் பாராட்டி வாழ்த்தி பேசுகிறோம். 
சட்டசபையில் முதல்வரை பாராட்டினால், தே.மு.தி.க., எம்.எல். ஏ.,க்கள், எங்களை தாக்குகின்றனர். அவர்களில் பலர் அரசுக்கு நன்றி தெரிவித்து பேசுகின்றனர்; அவர்களுக்கு ஒரு நியாயம். எங்களுக்கு ஒரு நியாயமா. 
முதல்வரை பாராட்டி பேசும் எங்களை, ஏன் கட்சியை விட்டு டிஸ்மிஸ் செய்யவில்லை. தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சியை போல், தைரியமாக எங்களை கட்சியை விட்டு தூக்க வேண்டியது தானே. "என்னை உதிர்ந்த ரோமம்' என அந்தம்மா (பிரேமலதா) கூறினார். 
விஜயகாந்த் தலைவராக வருவதற்கு, எனது பங்களிப்பு, ஒரு "துளி' உள்ளது. அந்த "துளி' எந்த மாதிரி என்பது, நேரம் வரும்போது கூறுவேன். நன்றி கெட்டவர்களிடம் இருந்தது, "மிகப்பெரிய பாடம்' கற்று கொடுத்து விட்டது. ராஜ்யசபா தேர்தலின் போது, ஓட்டளிப்பது குறித்து முடிவெடுப்போம். 
அதிருப்தி எம்.எல்.ஏ., க்கள், எனது தலைமையின் கீழ் செயல்படுவார்களா, என்பது குறித்து எனக்கு தெரியாது. தே.மு.தி.க., வில், உண்மையான தொண்டனுக்கு மதிப்பில்லை. எனவே, அதிருப்தி எம்.எல்.ஏ., க்கள், இன்னும் நிறைய பேர் வருவார்கள். நாங்கள், முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளை பின்பற்றி நடப்போம்’’என்று கூறினார்.

ad

ad