புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2013

தாவும் எம்.எல்.ஏக்கள் பற்றி விஜயகாந்த் முக்கிய முடிவை அறிவிப்பார் : பிரேமலதா
ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ வி.சி.சந்திரகுமாரின் மகள் ருசிதாஸ்ரீயின் பூப்புனித நீராட்டு விழா ஈரோடு பழைய பாளையத்தில் உள்ள பிருந்தாவன்
மகாலில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தலைமை தாங்கி பூப்புனித நீராட்டு விழாவை நடத்தி வைத்தார்.

அப்போது அவர் பேசியபோது,  ‘’தேமு.தி.க. என்பது ஒரு கட்சி மட்டும் அல்ல, ஒரு குடும்பம் என்பதற்கு இங்கு நடக்கும் நிகழ்ச்சி எடுத்துகாட்டு. அன்பு-பாசத்துக்கு அப்பாற்பட்டு யாராலும்
தே.முதி.கவை அசைக்க முடியாது. தே.மு.தி.க. ஏதோ நேற்று வந்த கட்சி என்று யாரும் நினைக்க வேண்டாம்.
30 ஆண்டுகளாக ரசிகர் மன்றம் என்ற சிறு செடியாக வளர்ந்து விஜயகாந்தின் பார்வையில் வளர்ந்து இன்று ஆலவிருட்சமாக வளர்ந்து நிற்கிறது. திருப்பூரில் நடத்த ஆர்ப்பாட்டம் தே.மு.தி.க வுக்கு ஒருதிருப்பு முனையாக அமைந்துள்ளது. 
நாங்கள் எங்கேயும்- தனிப்பட்ட யாரையும் தாக்கி பேசியதில்லை. தனிப்பட்ட யாரையும் தாக்கிபேசி ஓட்டு வாங்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. ஆளுங்கட்சியில் நடக்கும் அவலங்களை சுட்டி காட்டுவது அரசியல் கட்சியின் கடமை. 
அதைதான் நாங்கள் செய்து வருகிறோம். மக்கள் பிரச்சனையை தான் பேசுகிறோம். தேர்தல் நேரத்தில் விலைவாசியை குறைப்போம். மின்வெட்டு இல்லா மாநிலமாக்குவோம். வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்று எல்லாம் முதலமைச்சர் வாக்குறுதி கொடுத்தார்.
 
ஆனால் அவர் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிந்தும் இன்னும் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. இவ்வாறு பேசினால் எங்கள் மீது வழக்கு போடுகிறார்கள். இந்த வழக்குகளை சந்திக்க தே.மு.தி.க தயாராக உள்ளது.
மக்களுக்காக ஒரு வழக்கு அல்ல. ஒரு லட்சம் வழக்குகள் போட்டாலும் அதை சந்திக்க தயாராக உள்ளோம். மக்களுக்காக ஜெயிலுக்கு போகவும் தயாராக உள்ளோம்.  29 தே.மு.தி.க. எம்.எல்.ஏ க்கள் அ,தி.மு.க.வால் தான் வெற்றி பெற்றார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் 151 அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தே.மு.தி க வினால் தான் கிடைத்தார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க-தி.மு.க.வுக்கு தே.மு.தி.க சிம்ம சொப்பனமாக உள்ளது. காய்த்த மரம் தான் கல்லடி படும் என்று சொல்வார்கள். தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள்  7பேர் எங்களை விட்டுசென்று விட்டதாக கூறுகிறார்கள். அவர்கள் 7 பேரின் ஓட்டுகள் தான் போய் உள்ளன. ஆனால் 7 கோடி மக்களின் அன்பு எங்களுக்கு உள்ளது.
தமிழக அரசியலில் துரோகிகளுக்கு என்றுமே வரலாறு இருந்தது இல்லை. இப்போது மேல் சபை தேர்தலையொட்டி ஒரு எம். பிக்காக நாங்கள் கூட்டணிக்கு அலைவது போல கூறுகிறார்கள். எங்களுக்கு மேல் சபை எம்.பி என்பது லட்சியமே இல்லை.
இன்னும் 15 நாட்களில் மேல்-சபை எம்.பி தேர்தல் குறித்தும், மேலும் தற்போது தே.மு.தி.க எம்,எல்.ஏக்கள் முதலமைச்சரை சந்தித்து வருவது குறித்தும் விஜயகாந்த் முக்கிய முடிவை அறிவிப்பார்’’என்று கூறினார்.

ad

ad