புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2013


டெல்லி மேல்சபை தேர்தல்: ஜெயலலிதா முன்னிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்கள்
டெல்லி மேல்-சபைக்கு புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு
தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 17-ந் தேதி மனுதாக்கல் முடிகிறது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களாக தற்போதைய எம்.பி. மைத்ரேயன், நீலகிரி மாவட்ட செயலாளர் கே.ஆர்.அர்ஜுனன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் டி.ரத்தினவேல், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் ஆர்.லட்சுமணன், மாநில விவசாயி அணி செயலாளர் கு.தங்கமுத்து ஆகியோரை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். 
ஏற்கனவே அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவர் அணி செயலாளர் எஸ்.சரவணபெருமாள் மாற்றப்பட்டு தஞ்சையைச் சேர்ந்த கு.தங்கமுத்து அறிவிக்கப்பட்டுள்ளார். 
அ.தி.மு.க. வேட்பாளர்கள் 5 பேரும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஒவ்வொரு வேட்பாளரின் மனுவையும் குறைந்தது 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிய வேண்டும். அதன்படி அ.தி.மு.க. வேட்பாளர்களை 50 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிந்துள்ளனர். 
அனைவரும் மதியம் தலைமைச் செயலகம் புறப்பட்டுச் சென்றனர். பகல் 1.40 மணிக்கு மேல் மேல்-சபை தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியான சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம் 5 வேட்பாளர்களும் ஒவ்வொருவராக மனுதாக்கல் செய்தனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இந்த மனு தாக்கல் நடந்தது.

ad

ad