புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2013


சென்னை ஆர்.கே.நகரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை: வடசென்னையில் 3 நாளில் 16 கொலை
சென்னை கொருக்குப்பேட்டையை அடுத்த ஆர்.கே.நகர் பகுதியில் பிரபலமான ரவுடியாக இருந்து வந்தவன் கொத்தாலி ரமேஷ். புதன்கிழமை
மாலை 8 மணி அளவில் இதே பகுதியில் உள்ள சுண்ணாம்பு கால்வாய் என்ற இடத்தில் ரத்த வெள்ளத்தில் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் கொடூரமான முறையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை, உடனே போலீசார் அங்கிருந்து ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 
இச்சம்பவம் பற்றி போலீசார் தரப்பில் கூறப்படுபவதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.கே.நகர், ஜெ.ஜெ.நகர் பகுதிகளில் பிரபலமான தாதாவாய் வளம் வந்தவர் பாபா சுரேஷ். இவரை போலீசார் எண்கவுண்டர் முறையில் சுட்டுக்கொன்றனர். பாபாசுரேசின் தம்பியான கொத்தாலி ரமேஷ் அதன் பின்னர் இந்தப் பகுதியில் மாமுல் வசூலிக்கும் தாதாவாக செயல்பட்டு வந்தார். 
அண்மையில் இந்த பகுதிக்கு ராஜ்குமார் என்ற இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றதும், பழைய ரவுடிகளின் பட்டியலை தேடிப்பிடித்து களையெடுக்க ஆரம்பித்தார். இதில் தாதாக்கள் பலரும் ஏரியாவைவிட்டு தலைமறைவாகிவிட்டனர். பலமாதங்களாக இப்படி தலைமறைவில் இருந்த ரவுடிகளில் ஒருவர் இந்த கொத்தாலி ரமேஷ். 
இந்த சூழ்நிலையில் புதன்கிழமை இரவு தன் உறவினர்களை பார்த்துவிட்டு வர கொத்தாலி ரமேஷ் தன் வீட்டிற்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்து கொண்ட அவரது விரோதிகள் வீட்டிற்கு வரும் வழியில் உள்ள சுண்ணாம்பு கால்வாய் என்ற இடத்தில் அவரை வழிமறித்து இந்த கொலையை செய்திருக்கலாம் என்று கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
வடசென்னையில் கடந்த திங்கள் முதல் புதன்கிழமை வரை நடந்துள்ள கொலைகளின் எண்ணிக்கை இந்தக் கொலையோடு சேர்த்து 16 ஆகும். இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

ad

ad