www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், செப்டம்பர் 23, 2013

ஐ.நாவில் மகிந்த ராஜபக்ச உரை : துளைத்தெடுக்கும் இன்னர்சிட்டி ஊடகம் ! எதிர்ப்பினைக்காட்ட தயாராகும் தமிழர்கள் !
நியூ யோர்க் - ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கூட்டத் தொடரில் பங்குபற்று வதற்காக சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச அமெரிக்க சென்றுள்ள நிலையில், ஐ.நாவுக்குள் இயங்கும் சுதந்திர ஊடகமாக
வட மாகாண முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்!
 
இலங்கையின் வடமாகாண சபைக்கான தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் இன்று யாழ்ப்பாணத்தில் கூடி, விக்னேஸ்வரன் அவர்களை உத்தியோகபூர்வமாக முதலமைச்சராகத் தெரிவு செய்திருக்கின்றார்கள்.
கூட்டமைப்பின் போனஸ் ஆசனங்களில் ஒன்று முஸ்லிம் பிரதிநிதிக்கு..! மற்றது பெண்ணொருவருக்கு.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப் பெற்ற போனஸ் ஆசனங்களில் ஒன்று முஸ்லிம் பிரதிநிதியொருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

முதல்வராக பதவியேற்க உள்ள சி.வி.விக்னேஸ்வரன், 1939 அக்., 23ல், கொழும்பில் பிறந்தார். இவரது பெற்றோர், வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் அருகே மணிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள். தந்தை கனகசபாபதி, அரசுப் பணியில் இருந்தார். அதனால், அவரது குடும்பம் அடிக்கடி வெவ்வேறு இடங்களில் குடியேறியது.விக்னேஸ்வரன் துவக்க கல்வியை, "குருநாகல் கிரைஸ்ட்ச் சர்ச்' கல்லூரியிலும், அனுராதாபுரம் பள்ளியிலும் படித்தார். பி.ஏ., படிப்பை, லண்டன் பல்கலைக் கழகத்திலும்; சட்டப்படிப்பை, கொழும்பு பல்கலையிலும் முடித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியை போனஸ் ஆசன உறுப்பினராக நியமிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள ஊடகமொன்றில் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.கூட்டமைப்பின் சார்பில்
இலங்கை வடக்கு மாகாணத்தில் கால்நூற்றாண்டுக்குப் பிறகு ஒரு விடியல் தோன்றியுள்ளது. அங்கு நடந்துள்ள தேர்தலில், மாகாணத்தின் மொத்தமுள்ள 38 இடங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு 30 இடங்கள் கிடைத்துள்ளன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்கெனவே அறிவித்திருந்ததைப்போல, முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக பொறுப்பேற்பது உறுதியாகிவிட்டது.
இலங்கையில், இறுதிப் போருக்குப் பிறகு பல்வேறு கருத்து மாறுபாடுகள் இருந்தபோதிலும்கூட, ஐந்து கட்சிகள் இணைந்து இத்தேர்தலைச் சந்தித்திருப்பதும், முதலமைச்சர் வேட்பாளரை முன்னிலைப்படுத்தியதும், இலங்கைவாழ் தமிழர்களிடையே தற்போது நிலவும் ஒற்றுமையை வெளிக்காட்டியுள்ளது. இந்த ஒற்றுமை, தேர்தல் வெற்றிக்குப் பிறகும் நீடிக்கும் என்று நம்புகிறோம். நீடிக்க வேண்டும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு 74 சதவீத வாக்குகள் கிடைத்திருப்பதையும், இலங்கை அதிபர் ராஜபட்ச சார்ந்துள்ள கூட்டணி, மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளதையும் பார்க்கும்போது, ஆளும்கட்சி மீதான எதிர்ப்பை இலங்கைத் தமிழர்கள் இத்தேர்தலில் காட்டியியிருக்கிறார்கள் என்பது புரிகிறது.
13ஆவது அரசியல் சட்டத் திருத்தம் மூலம் மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டாக வேண்டும். அதனால், இந்த வெற்றி, தமிழர்களுக்குப் புதிய அதிகார பலத்தைத் தரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இது முழுமையான அதிகாரம் இல்லை என்பதும், இம்மாகாண ஆளுநராக ஒரு சிங்களரைத்தான் ஆளும்கட்சி நியமிக்கும் என்பதும், ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தமிழ்க் கட்சிகள் தாங்கள் விரும்பிய மாற்றங்களைச் செய்வது இயலாது என்பதும் தெரிந்தாலும்கூட, தமிழர்களுக்குத் தங்களை நிர்வகித்துக் கொள்ளும் அதிகாரம் கிடைத்திருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. முதலில் தற்போது கிடைத்துள்ள வெற்றியைக் கொண்டாட வேண்டும். பிறகு முழுஅதிகாரம் பெறுவதற்கான அரசியல் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

விக்னேஸ்வரனுக்கு வாழ்த்துகள்!-Dinamani 

"இவ்வளவு தமிழர்கள் வடக்கு மாகாணத்தில் இயல்பாக வாழ்வதற்கும் ஜனநாயக ரீதியில் தைரியமாக எதிர்த்து வாக்களிக்கவும் முடிந்திருக்கிறது என்றால், இலங்கை அரசு எவ்வளவு நியாயமாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை உலகம் அறியும்' என்று
மனித உரிமைகள் கண்காணிப்பத்தின் 'உலக ஆண்டறிக்கை-2013' : சிறிலங்கா பற்றிய குற்றப் பட்டியல்

சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் ஜனநாயக ஆட்சியை மீறும் செயல்களை 2012லும் தொடர்ந்தும் மேற்கொண்டதுடன், 2009ல் நாட்டில் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட உள்நாட்டு ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில் தனது தரப்பால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு
யாழ்ப்பாணத்தில் வெற்றியைப் பறிகொடுத்த வேட்பாளர்களின் விருப்புவாக்குகள்

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்ட பல முக்கிய பிரமுகர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். குறைந்தளவு விருப்பு வாக்குகளைப் பெற்றதால், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களில், ஈபிடிபியின் முதன்மை வேட்பாளர் தவராசாவும் உள்ளடங்கியுள்ளார்.