புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2013

யாழ்ப்பாணத்தில் வெற்றியைப் பறிகொடுத்த வேட்பாளர்களின் விருப்புவாக்குகள்

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்ட பல முக்கிய பிரமுகர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். குறைந்தளவு விருப்பு வாக்குகளைப் பெற்றதால், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களில், ஈபிடிபியின் முதன்மை வேட்பாளர் தவராசாவும் உள்ளடங்கியுள்ளார். 

இவருக்கு 9803 விருப்பு வாக்குகளே கிடைத்ததால், மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடங்கொடுக்காததால், ஈபிடிபியில் இணைந்து போட்டியிட்ட, வடகிழக்கு மாகாண கல்வியமைச்சின் முன்னாள் செயலரான சுந்தரம் டிவகலாலாவுக்கு 1963 விருப்பு வாக்குகள் தான் கிடைத்துள்ளன.

ஊடகவியலாளர் கோடீஸ்வரன் ருசாங்கன் 1074 வாக்குகளை மட்டும் பெற்று, ஈபிடிபி வேட்பாளர்களிலேயே கடைசி இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குத் தாவிய, சட்டவாளர் முடியப்பு றெமீடியசுக்கு 1801 விருப்பு வாக்குகளே கிடைத்திருந்தன.

2009இல் யாழ்.மாநகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்ட இவருக்கு, யாழ் மாநகரப் பகுதிக்குள் மட்டும், 4223 விருப்பு வாக்குகள் கிடைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியுற்ற வேட்பாளர்கள் பெற்ற விருப்புவாக்குகள்-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தர்மலிங்கம் -13,016
குகதாஸ் -11,256
தம்பிராசா - 7,325
சுப்பிரமணியம் - 6,578
ஜெயசேகரம் - 6,275

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி)

தவராசா - 9,803
சிறிரங்கேஸ்வரன் - 5,462
சூசைமுத்து - 4,666
பாலகிருஷ்ணன் - 4,611
அகஸ்ரின் - 2,482
கணேசன் - 1,966
சுந்தரம் டிவகலாலா - 1,963
ஞானசக்தி ஸ்ரீதரன் - 1,939
ருசாங்கன் -1,074

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
சிறாஸ் - 3,323
அகிலதாஸ் - 2,482
சர்வானந்தா - 2,293
றெமீடியஸ் -1,801
கதிரவேல் - 1,605
சுபியான் - 1,046
பொன்னம்பலம் - 797

ad

ad