புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2014

குடியரசு தினம் : சென்னையில் 6 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடுத்த வாலிபர் பிடிபட்டார்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 8 மணியளவில் மர்ம நபர் ஒருவர் போன் செய்து பேசினார். அவர், ‘குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா மேம்பாலம் உட்பட 6
இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நிமிடங்களில் அந்த வெடிகுண்டுகள் அனைத்தும் வெடிக்கும்’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.


இதையடுத்து, இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர் அதிகாரிகளின் உத்தரவின்படி, வெடிகுண்டு நிபுணர்கள் சென்னை அண்ணாசாலையில் நேற்று காலை வெடிகுண்டு உள்ளதா? என்று சோதனை நடத்தினார்கள். அப்போது, அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை.
இதுபோல், அந்த மர்ம நபர் கூறிய 6 இடங்கள் உட்பட பல இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியும், எந்த பொருளும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர் பயன்படுத்திய செல்போன் நம்பர், சைபர் கிரைம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
அந்த நம்பர் யார் பெயரில் வாங்கப்பட்டுள்ளது? என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அது திருப்பத்தூரில் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அந்த செல்போனை நங்கநல்லூரை சேர்ந்த பிரபு என்ற வாலிபர் ஒருவர் பயன்படுத்தி வருவது தெரிந்தது. இதையடுத்து நேற்று மாலையில், பிரபுவை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad