புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2014

த. தே. கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகும் நிலைமை உருவாகியுள்ளது: யோகேஸ்வரன் M.P
ஐக்கிய தேசியக் கட்சி தற்போது பலவீனமடைந்துவரும் நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாகும் நிலைமை உருவாகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி திருப்பழுகாமம் இந்து கலாமன்றம் நடாத்திய பொங்கல் விழாவும், இந்து கலாமன்ற அறநெறிப்பாடசாலையின் பரிசளிப்பு விழா நிகழ்வானது திருப்பழுகாமம் திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் திருப்பழுகாமம் இந்து கலா மன்றத்தின் தலைவர் எஸ்.குகன் தலைமையில் சனிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இன்னும் சொற்பகாலத்திலே ஐக்கிய தேசிய கட்சியில் இருப்பவர்கள் கூட அரசாங்கத்தின் பக்கம் தாவுவார்களாக இருந்தால் இப்போது தாவிக் கொண்டிருக்கிறார்கள் அந்த நிலமை ஏற்பாடுமாயிருந்தால் முன்பு அமிர்தலிங்கம் எதிர்க்கட்சியாக இருந்தது போன்று சம்பந்தன் ஐயா எதிர்க்கட்சித்தலைவராக இருக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பொன்.செல்வராசா பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோரும் மற்றும் ஆன்மீக அதிதியாக போரதீவு பத்திரகாளியம்மன் ஆலய பிரதம குருக்கள் பிரம்மஸ்ரீ வி.கே.சந்திரகாந்தன் குருக்களும் ஏனைய அதிதிகளாக தமிழ் தேசிய கூடடமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோரும் மற்றும் கிராம பிரமுகர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ad

ad