புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2014

ஆணைக்குழுவின் சிபார்சுகளையோ, ஜெனிவா தீர்மானங்களையோ அரசு நிறைவேற்றவில்லை!- இரா.சம்பந்தன்
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளையோ அன்றேல் 2013ல் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ இலங்கை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. என்று தமிழ்  தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற சிரேஸ்ட உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அதேபோன்று வடமாகாண சபையின் சீரான இயக்கத்துக்கு உதவுவதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சிங்கள ஊடகங்கள் கூறுவது போன்று ஜனாதிபதியிடமிருந்து எமக்கு எந்தவித உத்தியோகபூர்வ அழைப்பும் வரவில்லை. அவ்வாறு வந்தால் அதுகுறித்து சிந்திக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் முன்னர் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனவே? அதுகுறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
ஜனாதிபதியுடன் வடமாகாண முதலமைச்சர் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இதன் பின்னர் ஏதேனும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா? என்று கேட்டபோதே இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மாகாணசபையை முறையாக இயங்கச் செய்ய மத்திய அரசுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக நாங்கள் அரசுக்கு சமிக்ஞைகளை வெளிப்படுத்தினோம். எமக்குத் தேவையான கருமங்களை எழுத்துமூலமாகச் சமர்ப்பித்தோம். இவற்றுக்கு அப்பால் முதலமைச்சர் ஜனாதிபதியுடன் நேரில் சென்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன்போது ஜனாதிபதிக்கும் முதலமைச்சருக்கும் இடையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றை உடனடியாக நிறைவேற்றுவதாக ஜனாதிபதி வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். ஆனால் இவை எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. அனைத்தும் பின்போடப்பட்டுள்ளன. இந்தவிடயம் தொடர்பில் நாம் முழுமையான அவதானத்தை செலுத்தி வருகின்றோம் என்றார்.
ஜெனிவா கூட்டத்தொடரின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான பங்களிப்பைச் செய்யவுள்ளது என்று கூற முடியுமா என்று வினவிய போது அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பதிலளிக்கையில்,
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளையோ அன்றேல் 2013ல் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ இலங்கை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. மக்களின் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாமல் கிடப்பில் உள்ளது. மீளக்குடியேறிய மக்கள் மிகுந்த கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் பொதுமக்களின் காணிகள் பல சுவீகரிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சுவீகரிக்கப்பட்டு வருகின்றன.பாரம்பரியமாக மக்கள் வாழ்ந்த காணிகளில் அவர்கள் தொடர்ந்து வாழ வழில்லாத நிலைமை காணப்படுகின்றது.
மக்கள் தங்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத மிகுந்த கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இராணுவத்தினரின் நடவடிக்கைகள் இவற்றுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகின்றது.
கடற்றொழிலை மேற்கொள்ள முடியாதவர்களாக மீனவர்கள் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கான அறிகுறிகளை காண முடியவில்லை.
அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னத்தைக் குறைத்து சிவில் அதிகாரிகளின் செயற்பாடுகளை அதிகரிக்க வேண்டும். வடமாகாண சபையை முறையாக கொண்டு நடத்தமுடியாத சூழ்நிலையே உருவாக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து நாம் அதீத கவனம் செலுத்தி வருகின்றோம்.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. எமது இலக்குகள் குறித்து நாம் எப்போதும் கவனம் செலுத்தியே வருகின்றோம்.
இலங்கை விவாகரம் தொடர்பில் ஐநா உயர்ஸ்தானிகர் தனது நேரடிக் கவனத்தை செலுத்தியுள்ளார் ஜெனிவா குட்டத்தொடரில் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் தேவையான விவரங்களை  வைழங்க நாம் தயாராக இருக்கின்றோம் என்றும் கூறினார்.

ad

ad