புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2014

வீரருக்கு காயம் ஒரு தடையல்ல என்பதை ஸ்பெயினின் ரஃபேல் நடால், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் 2-வது அரையிறுதியில் நிரூபித்தார்.
இடது கை ஆட்டக்காரரான அவர், ராக்கெட்டை (டென்னிஸ் மட்டை) பிடித்து விளையாடியதில் உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது. காயத்துக்கு மருந்திட்டுக் கொண்டே விளையாடவும் செய்தார். ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரருக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 7-6
(7/4), 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று, தனது காயத்துக்கு வெற்றியையே மருந்தாக்கினார்.
ஃபெடரரை, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களில் நடால் தோற்கடித்துள்ளார். 2009இல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற நடால், 3-வது முறையாக தொடர்ச்சியாக இப்போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
19-வது இறுதிச்சுற்று: இத்துடன், கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு 19 முறை நடால் முன்னேறியுள்ளார். அதில், 13 முறை பட்டங்களை வென்றுள்ளார். மேலும் ஒரு பட்டத்தை அவர் வெல்லும் பட்சத்தில், 14 கிராண்ட்ஸ்லாம்களை வென்ற அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸின் சாதனையை சமன் செய்வார்.
இறுதிச்சுற்று: இறுதி ஆட்டத்தில், மற்றொரு ஸ்விட்சர்லாந்து ஆட்டக்காரரான வாவ்ரிங்காவை நடால் எதிர்கொள்ள உள்ளார். காலிறுதியில் அதிருஷ்டவசமாக தப்பி வந்த நடால், இறுதிச் சுற்றுக்குள்ளும் நுழைந்துள்ளார். ஆனால் இறுதிச்சுற்றில் நடாலுக்கு சவால் காத்திருக்கிறது.
காலிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச்சையும், அரையிறுதியில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சையும் வீழ்த்திய வாவ்ரிங்காவை இறுதிச்சுற்றில் எதிர்கொள்வது நடாலுக்கு மிகவும் சவாலான விஷயமாகும்.
தரவரிசையில் 8-வது இடத்தில் வாவ்ரிங்கா இருந்தாலும், சமீபகாலமாக மிகவும் அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தவிர, இது அவருடைய முதலாவது கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்றாகும். இதில், வாகையர் பட்டம் சூடவே ஸ்டான் விரும்புவார். ஆதலால், தரவரிசையில் முதல் 4 இடங்களில் உள்ள வீரர்கள் மட்டும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் ஆடி வந்த நிலைமையை மாற்றியுள்ள ஸ்டான், இம்முறை பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
மற்ற வீரர்களைப்போல் அல்லாமல், முதல் 2 செட்களை இழந்தாலும், அதிலிருந்து மீண்டு வெற்றி பெற்று வரும் நடாலை வீழ்த்துவது ஸ்டானுக்கும் கடினமான காரியமே. அதனால், டென்னிஸ் ரசிகர்களுக்கு ஆடவர் இறுதிச்சுற்றில் ஆக்ரோஷமான ஆட்டம் காத்திருக்கிறது.
இறுதிச்சுற்றில் சானியா ஜோடி
மகளிர் இரட்டையர் பிரிவில் ஏமாற்றிய சானிய மிர்சா, கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிச்சுற்றை எட்டியுள்ளார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சானியா மிர்சா-ருமேனியாவின் ஹோரியா டகாவ் ஜோடி 2-6, 6-3, 10-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் கஜ்டோசோவா-மேத்யூ எட்பன் ஜோடியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இறுதிச்சுற்றில் சானியா ஜோடி பிரான்ஸின் மல்டெனோவிச்-கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடியை எதிர்கொள்கிறது.
இன்றைய ஆட்டம்
லீ நா (சீனா, 4) - டொமினிகா சிபுல்கோவா (ஸ்லோவேகியா, 20)
கடந்து வந்த பாதை
முதல் சுற்று அன கான்ஜு (குரோஷியா) ஃபிரன்செஸ்கா ஷிவோனா (இத்தாலி)
2-ம் சுற்று பென்சிச் (ஸ்விட்சர்லாந்து) வோஜிலா (ஸ்விட்சர்லாந்து)
3-ம் சுற்று சஃபரோவா (செக் குடியரசு) நவரோவா (ஸ்பெயின்)
4-ம் சுற்று மகரோவா (ரஷியா) ஷரபோவா (ரஷியா)
காலிறுதி பெனட்டா (இத்தாலி) ஹலேப் (ருமேனியா)
அரையிறுதி பெளசார்டு (கனடா) ரத்வான்ஸ்கா (போலந்து)

ad

ad