புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2014

அமெரிக்கா மற்றும் கனடாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு காணப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகம் இருப்பதால், மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.மைனஸ் 51 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் குளிர் வீசுவதால், பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

குறிப்பாக அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிகாகோ, மோன்டனா, மின்னசோடா, இல்லினாயிஸ் ஆகிய நகரங்களில் வரலாறு காணாத பனிப்பொழிவு காணப்படுகிறது.
அதிகபட்சமாக, மான்டனாவின் கோமர்டவுன் பகுதியில் நேற்று மைனஸ் 51 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் குளிர் பதிவானது.
சிகாகோவில் மைனஸ் 16 டிகிரி பதிவானது, கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவில் இந்தளவுக்கு பனிப்பொழிவு இருந்ததில்லை என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்து காணப்படுவதால், போக்குவரத்து, விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பல நகரங்களில் பனியில் உறைந்து மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மின்சாரம் இல்லாததால் வீடுகளில் வசிக்க முடியாமல் மக்கள் அரசின் தற்காலிக தங்கும் விடுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
கடும் குளிருக்கு இதுவரையிலும் 16 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
இதே போல கனடாவிலும் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமல் கடும் குளிரில் தவிக்கின்றனர்.
அங்கு மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. இதனால், விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
சிகாகோவை ஒட்டியுள்ள வட தகோடா, தென் தகோடா பகுதிகளில் மைனஸ் 29 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது.
இன்னும் 3- 4 நாட்களுக்குள் வானிலை சீராகும் பனிப்புயல் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ad

ad