புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2014

பிரதமர் - சிங்கள ராவய அமைப்பினர் சந்திப்பு - பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்: கொழும்பில் பதற்ற நிலை
சிங்கள ராவய அமைப்பு, பிரதமர் டி.எம். ஜயரட்னவை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.சமகால விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்கில் சிங்கள ராவய அமைப்பு பிரதமரை சந்திக்க உள்ளது.
சிங்கள ராவய அமைப்பின் உறுப்பினர்கள் கொழும்பு 7ல் கூடியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போதைப் பொருள் கொள்கலன், பௌத்த பிக்குகள் இழிவுபடுத்தப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் டி.எம். ஜயரட்னவிற்கு எதிரான அழுத்தங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் பதவி விலக கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்- பிக்குமார் சிலர் காயம்
புத்தசாசன அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் டி.எம். ஜயரத்ன உடனடியாக விலக வேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
சிங்கள ராவ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பௌத்த பிக்குமாருக்கு எதிராக பகிரங்கமான இடங்களில் வைத்து தவறாக பேசியமை குறித்து பிரதமர் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என சிங்கள ராவய அமைப்பு கேட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான பிக்குமார் கலந்து கொண்டுள்ளனர்.
பிரதமர் டி.எம். ஜயரத்னவுக்கு எதிராக பிரதமரின் அலுவலகத்திற்கு எதிரில் சிங்கள ராவய அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.
பொலிஸாருக்கும் பிக்குமாருக்கும் இடையில் ஏற்பட்ட இந்த மோதலில் சிலர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
தமது ஆணையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார் உள்ளிட்ட குழுவினர் பிரதமரின் அலுவலகத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பிக்குமார் சிலர் காயமடைந்துள்ளனர். எனினும் தாம் பிக்குமார் மீது தாக்குதல் நடத்தவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டகார்களை தடுக்க போடப்பட்டிருந்த வீதி தடை ஆர்ப்பாட்டகார்கள் மீது விழுந்தத்தில் சிலர் காயமடைந்தனர் எனவும் பொலிஸார் கூறினர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக பிரதமரின் அலுவலகம் அமைந்துள்ள கொழும்பு 7 பிளவர் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பிரதமர் தூள் வியாபாரி கிடையாது: தயாசிறி ஜயசேகர
பிரதமர் டி.எம். ஜயரத்ன மீது போதைப் பொருள் குற்றச்சாட்டை சுமத்தி சேறு பூசுவது தவறானது என வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்வதாக கூறுகின்றனர். பிரதமர் ஹெரோயின் விற்பவர் என்பதை சிறுபிள்ளைக் கூட நம்பாது. அவர் அவ்வாறு செய்யும் மனிதரும் கிடையாது.
எனினும் பிரதமரின் செயலாளர் ஒருவர் நிறுவனம் ஒன்றுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். எனது செயலாளரும் கடிதம் ஒன்றை வழங்கி அதில் ஹெரோயின் போதைப் பொருள் சம்பந்தப்பட்டிருந்தால் எனது கதையும் முடிந்து விடும்.
நானும் ஹெரோயின் விற்பனையாளராக மாற்றப்பட்டு விடுவேன். கட்டணத்தை குறைத்து தருமாறு கேட்டு எங்களிடம் கடிதம் கேட்பார்கள். அதில் கசிப்பு இருந்தால் என்னவாகும். தயாசிறி ஜயசேகர கசிப்புகாரன் என்று கூறுவார்கள்.
பிரதமர் போதைப் பொருள் விற்பனையாளர் கிடையாது. அரசாங்கத்தில் உள்ள முக்கிய நபர்கள் மீது தாக்குதலை தொடுக்கவே இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் என்றார்

ad

ad