புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2014

சபாநாயகராக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜோன் அமரதுங்க! சமல் ராஜபக்ச பிரதமராகிறார்
அரசுடன் இணைந்து கொள்ள சபாநாயகர் அல்லது பிரதி அமைச்சர் பதவியொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஜோன் அமரதுங்க கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள குறித்த இரண்டு பதவிகளில் ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோரியுள்ளார்.
கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க, கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோன் அமரதுங்க ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் உள்விவகாரம் மற்றும் பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மத்திய கிழக்கிற்கு மேற்கொண்டுள்ள விஜயத்தில் ஜோன் அமரதுங்கவும் இணைந்து கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் ஜோன் அமரதுங்க, ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்தில் இணைந்துகொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பலஸ்தீன மத வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியில் ஜோன் அமரதுங்க அனுமதி பெற்றுக்கொண்டுள்ளார்.

ad

ad