புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2014

ஜெனீவா யோசனையை இலங்கை நிராகரித்தால் பொருளாதார தடை விதிக்கப்படலாம்!: யஸ்மின் சூக்கா

ஜெனீவா யோசனை நிறைவேற்றத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணங்கி செயற்பட இலங்கை மறுத்தால், பொருளாதார தடை உட்பட்ட பல்வேறு பிரச்சினைகளை அந்த நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐ.நா சபையின் முன்னாள் ஆலோசர் யஸ்மின் சூக்கா எச்சரித்துள்ளார்.
இலங்கையின் ஆங்கில ஊடகம்  ஒன்று இந்த
தகவலை வெளியிட்டுள்ளது.
ஜெனீவா யோசனைக்கு ஏற்ப சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ளாது போனால், அது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தப்படாது.
அது ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்ததாகவே கருதப்படும் என்று சூக்கா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் ஜெனீவா யோசனையை ஏற்றுக்கொள்ளாது போனால், தடை என்ற அடிப்படையில் அரசியல் தலைவர்களுக்கான போக்குவரத்து தடை, சொத்துக்களை முடக்கல், வெளிநாட்டு முதலீடுகளில் குறைப்பு மற்றும் அமெரிக்கா டொலர்களில் பரிமாற்றிமின்மை போன்ற தடைகள் ஏற்படுத்தப்படலாம் என்று சூக்கா குறிப்பிட்டார்.
கிரைமியாவுக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விதித்துள்ள தடைகளை சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad