30 மார்., 2014

விஜயகாந்த்தின் சகோதரர் கே.பால்ராஜ் தனது மனைவியுடன் திடீரென அதிமுகவில் இணைந்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னிலையில் விஜயகாந்த் தம்பி பால்ராஜ்
அவருடைய மனைவி வெங்கடலட்சுமி ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்.
அவர்களுடன் மேலும், திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தை சேர்ந்த அன்புச்செழியன், செல்வின்ராஜ், கபடி கழக தலைவர் சோலைராஜ், பா.ம.க. மகளிர் அணியை சேர்ந்த சாந்தி கண்ணன், தே.மு.தி.க.வைச் சேர்ந்த நந்தகோபன், குமார் என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 770 பேர் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர்.