புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2014




டந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை தி.மு.க. சந்தித்தது. தி.மு.க. வாக்குகள் 24 சதவீதமாக குறைந்ததும் அ.தி. மு.க.வின் வாக்கு சதவீதம் 44 ஆக அதிகரித்ததும் கலைஞர் தொடங்கி கட்சியின் அடிமட்ட தொண்டர்கள்வரை பயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனால், "கிளைக்கழகம் முதல் மாவட்டம் வரை கட்சி அமைப்புகளை எல்லா நிலைகளிலும் மாற்றியமைக்க வேண்டும்' என்கிற குரல் தி.மு.க.வில் பலமாக எதிரொலிக்கத் துவங்கியது. இதற்கு என்ன பண்ணலாம் என யோசித்துதான் கட்சியின் உயர்நிலை செயல் திட்டக் குழுவை ஜூன் 2-ல் கூட்டினார் கலைஞர். மறுநாள் நடந்த தனது பிறந்தநாள் பொதுக் கூட்டத்திலும் கட்சியின் நிலை குறித்து நிறைய பேசினார்.

அமைக்கப்பட்ட குழு!


தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய்ந்திடவும் எதிர்காலத்தில் தி.மு.க.வின் வளர்ச்சியையும் வலிமையையும் மேலும் பெருக்குவதற்கேற்ப நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆராயவும் உயர் மட்டக் குழு கூடுவதாக அறி வித்திருந்தார் பேராசிரியர். அதன்படி கலைஞர் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஆறாவது தீர்மானமாக, "கழகத்தின் ஆக்கப் பணிகளை விரைவாகவும் விரிவாகவும் ஆற்றுவதற்கேற்ப நீண்டகாலமாக பேசப் பட்டு வரும் கருத்துக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தற்போதுள்ள மாவட்ட கழக எல்லைகளை மாற்றி யமைக்கவும் மாவட்ட நிர்வாகங்களை வலிமைப்படுத்தவும் ஏற்ற சாத்தியக் கூறுகளை ஆய்ந்து முடிவெடுத்து கழகத் தலைமைக்கு பரிந்துரை செய்ய குழு ஒன்றை அமைக்க' தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. அதன்படி, கல்யாண சுந்தரம், ராஜமாணிக்கம், திருவேங்கடம், சச்சிதா னந்தம், தங்கம் தென்னரசு, கே.எஸ்.ராதா கிருஷ்ணன், ஆகிய 6 பேர் கொண்ட குழுவை அமைத்தார் கலைஞர். 

மாற்றம் வேண்டும்!


உயர்நிலை செயல்திட்ட கூட்டத்தின் தீர்மானத்தின்படி அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், கலைஞர் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் 10-ந் தேதி நடந்தது. இதில் பேராசிரியர், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், வி.பி.துரைசாமி ஆகியோரும் பங்கேற்றனர். கூட்டம் நடக்கும்போது உள்ளே வந்த பொன்முடியை உள்ளே அனுமதிக்கவில்லை. கூட்டத்தில் நடந்த விவாதத்தில் பேசிய தங்கம் தென்னரசு, ""கட்சி எடுக்க வேண்டிய பல முடிவுகளை மாவட்ட செயலாளர்களே எடுக்கிறார்கள். அதை மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தவும் செய்கிறார்கள். இதனால் நிறைய தவறுகள் நடக்கிறது. மாவட்ட அமைப்புகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியம்'' என்பதை வலியுறுத்தினார். 

திருவேங்கடம், ""கட்சியில் முன்பெல்லாம் உணர்வுபூர்வமான தொண்டர் கள் இருந்தார்கள். இப்போது அப்படிப்பட்டவர்களை பார்க்க முடியவில்லை. மாவட்டச் செயலாளரை வளைத்து வைத்துக்கொண்டால் போதும்ங்கிற நிலையில்தான் தொண்டர்கள் இருக்கிறார்கள். மாவட்டச் செயலாளர்களும் அப்படிப்பட்டவர்களைத்தான் ஊக்குவிக்கிறார்கள். இதனால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது'' என்றிருக்கிறார். சச்சிதானந்தமோ, ""கிளைக்கழகம் வரை பழுது பார்க்க வேண்டும். மாவட்டத்துக்குள்ளே கட்சி சுருங்கிக் கிடக்கிறது. அதனால், மொத்தமாக மாத்தியமைக்கணும்'' என்றார் அழுத்தமாக. கல்யாண சுந்தரம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ராஜமாணிக்கம் ஆகியோர், ""மிகப் பெரிய பொறுப்பைக் கொடுத்து எங்களை குழுவுல போட்டிருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாங்க என்ன செய்யணும்னு சொல்றீங்களோ அதை சிறப்பா செஞ்சு முடிப்போம்'' என்று சொல்ல, அதையே மற்ற மூவரும் வழிமொழிந்துள்ளனர். அப்போது கலைஞர், ""ஒவ்வொரு மாவட்ட செயலாளர் மீதும் நிறைய குற்றச்சாட்டு வருது. அது உண்மையான்னு விசாரியுங்க. மாவட்ட எல்லையை சுருக்கி, மாவட்ட செயலாளர்களின் ஆதிக்கத்தை குறைச்சிட்டாலே எல்லாம் சரியாயிடும். எல்லைகளை எப்படி மாத்தியமைக்கலாம்னு ஆராய்ந்து ரிப்போர்ட் கொடுங்க'' என்றார். 

கலைஞர்-முரசொலி செல்வம் ஆலோசனை


""மாவட்டங்களை பிரிக்கணும். கீழே இருப்பவர்களுக்கு பதவி கொடுத்து மேலே வரவழைச்சாதான் கட்சியின் வளர்ச்சி உயிரோட்டமாக இருக்கும்'' என்று அடிக்கடி சொல்லிவருபவர் முரசொலிமாறனின் தம்பி செல்வம் (இதனை பலமுறை நக்கீரனில் சுட்டிக்காட்டியிருக்கிறோம்). அவர் இது தொடர்பாக கலைஞரை சந்தித்து விவாதித்திருக்கிறார். அந்த விவாதத்தின் ஒரு கட்டத்தில் கலைஞர், ""மாவட்டங்களைப் பிரிக்கணும்னு சட்டமன்ற தேர்தல் முடிந்ததி லிருந்தே சொல்லிக்கிட்டிருக்கேன். ஸ்டாலின்தான் எடுத்துக்க மாட்டேங்கிறார். அவரிடம் போய் சொல்லு. இப்ப இருக்கிற மா.செ.க்களை நம்பிதானே தேர்த லில் இறங்கினார். ஒரு சீட் கூட வரலையே. அதனால் மாவட்டங்களைப் பிரிக் கிறதுதான் நல்லதுன்னு சொல்லு. என்கிட்டே எழுத்து, பேச்சு, சினிமா செல் வாக்கு இருந்தது. அதனாலதான் அண்ணாவுக்கு பிறகு தலைவராக முடிஞ்சது. முதலமைச்சரான நான், எனது காரிலே நாவலரை முன்சீட்டில் உட்கார வெச்சுக்கிட்டு அவரை அவரது வீட்டுக்குப் போய் இறக்கிவிட்டு வருவேன். தலைவராவதோ, முதல்வராவதோ அவ்வளவு சாதாரண விசயமல்ல. இந்த தேர்தல்ல 10, 20 சீட் ஜெயிச்சிருந்தோம்னா ஓ.கே! கொளத்தூர் தொகுதியிலே தி.மு.க. கொறைச்ச ஓட்டு வாங்கியிருக்கு. வரும் சட்டமன்ற தேர்தலிலும் கட்சி தோத்துச்சுன்னா ரொம்ப கஷ்டம். அதனால, மாவட்டங்களைப் பிரிக்கணும்னு சொல்லு'' என்று அறிவுறுத்தினார். 

தயாரான பட்டியல்!


கலைஞரின் அட்வைஸ்படி ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார் செல்வம். எந்த சூழலிலும் மாவட்டத்தைப் பிரிப்பதில் உடன்பாடில்லாத ஸ்டாலின், செல்வம் எடுத்துச்சொன்னதன் பேரில் மாவட்ட பிரி வினைக்கு ஒப்புக்கொள் கிறார். அதன்படி 234 சட்டமன்ற தொகுதி களில் 3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா ளர் என முடிவெடுத்தனர். அந்த வகையில் 78 மாவட்டம் வந்தது. அப் படிப் பிரிக்கும்போது சில மாவட்டங்களில் ஒரு தொகுதி, ரெண்டு தொகுதி தொக்கி நின் றது. அதனால் பெரிய மாவட்டங்களில்   மட் டும் 4 தொகுதிக்கு ஒரு மா.செ. என்று முடி வெடுத்தனர். அதாவது, கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதி கள். இதனை 3, 3, 3ஆக பிரித்தால் மீதம் 1 தொகுதி தொக்கி நிற் கிறது. அதனால், 3, 3, 4 என பிரிக்கலாம். அதே போல ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தலா 8 தொகுதிகள் இருக்கிறது. இதனை 4, 4 என பிரிக்க லாம் எனவும் விவாதித் தனர். இப்படிப்பட்ட ஆலோசனையின் முடிவில் 72 மாவட்டங்களை உருவாக்கி அதற்கு தலைவர்களையும் உருவாக்கி தோராயமாக மாவட்டச் செயலாளர்கள் பெயர்களையும் குறிப்பிட்டு பட்டியலை தயாரித்தனர். இதனை கலைஞரிடம் நேரடியாக தந்தார் ஸ்டாலின்.


குடும்ப தலையீடு


பட்டியலைப் பார்த்த கலைஞர், ""72-ங்கிறது அதிகமாக இருக்கே. சரி, பார்ப் போம்'' என்றவரிடம், ""கட்சியில் குடும்பத் தின் ஆதிக்கம் அதிகம் இருக்கு. அதுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்னு ஸ்டாலின் ஃபீல் பண்றார்'' என்று செல்வம் சொல்ல... ""கனிமொழியைத்தானே சொல்ல வர்றாரு. அவங்க ராஜ்யசபா எம்.பி.யா இருக்காங்க. அதோட அவங்கள விட்டுடுவோம். உங்க சைடுல எடுத்துக்கிட்டீங்கன்னா தயாநிதி மாறன் இருக்காரே?'' என்று கலைஞர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதுக்கு செல்வம், ""அவரையும் விட்டுறலாம். அவங்களுக்கு பிஸ்னெஸ் இருக்கு'' என்று சொல்லியிருக்கிறார் செல்வம். 

அதிர்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் 


மாவட்டங்களைப் பிரிக்க ஸ்டாலின் ஒப்புக்கொண்டார் என்பதை அறிந்த ஒட்டுமொத்த மா.செ.க்களுக்கும் அதிர்ச்சி. அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. எல்லா மா.செ.க்களும், ""பிரிக்கிறதுன்னு முடிவு பண்ணீட்டீங்கன்னா...… பிரிங்க. ஒத்துக்கிறோம். அதுக்காக 72 மாவட்டமாக பிரிக்கணுமா? அ.தி.மு.க. ஜெயித்ததினால தானே இவ்வளவு காட்டமா நடவடிக்கை எடுக்கிறீங்க. அப்படின்னா, அதே அ.தி. மு.க.வுல 52 மாவட்ட செயலாளர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஈக்குவலா, அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் மாவட்டத்தைப் போல நாமும் பிரிச்சி, 52 மாவட்டமாக உருவாக்குங்கள்'' என்று சொல்லி வருகிறார்கள். கலைஞரும் இதனை பரிசீலித்து வருகிறார். செல்வாக்காக இருக் கும் மா.செ.க்கள் சிலரோ ""3, 4 சட்டமன்ற தொகுதி அடங்கியதுதான் ஒரு  மாவட் டம்னா அது எங்களுக்கு வேண்டாம். மாநில பொறுப்புகளுக்கு எங்களை அழைத் துக்கொள்ளுங்கள்'' என்று வேண்டுகோள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். செப்டம்பரில் நடக்கும் முப்பெரும் விழாவுக்கு முன்பு தற்போதைய மா.செ.க்கள் சிலருக்கு தலைமையில் பொறுப்புகள் வழங்கப்பட லாம்.

பழைய வரலாறு திரும்பக் கூடாது


"தி.மு.க. அமைப்பில் மாற்றம் வேண்டும்' என இப்போதைய குரல் போல 1996-லும் எதிரொலித்தது. அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க.வின் தற்போதைய மா.செ.க்கள் பலரும் அமைச்சர்களாக இருந்தனர். அப் போது முரசொலிமாறன், ""மாவட்ட செயலாளர்கள், பலரும் மந்திரியாக இருப்பதால் அவர்களால் ஆட்சி யைத்தான் கவனிக்க முடியுமே தவிர, கட்சியை கவனிக்க முடியாது. அதனால் மந்திரிகளாக இருக்கும் மாவட்ட செயலாளர்களையெல்லாம் மாற்றுங்கள்'' என்று அதிரடி யாக கோரிக்கை வைத்தார். இதற்கு கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், நேரு, திண்டுக்கல் பெரியசாமி, பொன்முடி, பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். கட்சியில் கடும் சர்ச்சை வெடித்தது. அதை சமாளிக்க ஒவ்வொரு மாவட்டத்தையும் இரண்டாக உடைத்து இரண்டு மா.செ.க்களை நியமிப்பது எனவும் மந்திரிகளை மண்டல செயலாளராக்கிவிடலாம் என்றும் முடிவெடுத்து அதன்படி நியமித்தனர். ஆனால் என்ன நடந்தது? கோவையை வடக்கு, தெற்கு என இரண் டாக உடைத்து வடக்கில் அருண்குமாரையும் தெற்கில் தனது மனைவி விஜயலட்சுமியையும் மாவட்ட செயலாள ராக்கினார் பொங்கலூர் பழனிச்சாமி. ஈரோடு என்.கே.கே. பெரியசாமி தனது மகன் ராஜாவையும், வீரபாண்டி ஆறு முகம் தனது மகன் செழியனையும், ராமநாதபுரம் சுப.தங்க வேலன் தனது மகன் சம்பத்தையும் மாவட்ட செயலாள ராக்கினார்கள். நேரு, பொன்முடி, சுரேஷ்ராஜன் போன்றவர்களோ தங்களுக்கு அடங்கிக் கிடக்கும் நபர்களை தேடிப்பிடித்து பொறுப்புகள் வழங்கினார்கள். இதனை ஜீரணிக்க முடியாத முரசொலிமாறன், ஒரு பொதுக்குழுவில் ""திறமையான தகுதியான புதியவர்களுக்கு வாய்ப்புகள் தரும் போது கட்சி வளர்ச்சியடையும்ங்கிற கண்ணோட்டத்தில் நான் சொன்னேன்.  நீங்க என்ன செய்திருக்கீங்க''ன்னு ஆவேசப்பட்டார். உடனே தன் மனைவியை மா.செ. பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு தன் சித்தப்பா மகன் வேலுச்சாமியை நியமித்தார் பொங்கலூர் பழனிச்சாமி. ""இப்படி விரும்பத்தகாத நிறைய  சம்பவங்கள் இருக்கிறது. அதேபோன்ற நடைமுறை மாற்றங்கள் இப்போதும் நடந்தால் அதில் பிரயோஜனம் இல்லை'' என்கிற குரல்கள்  அதிகமாகவே எதிரொலிக்கின்றன.

இரண்டாவது கூட்ட முடிவு!


ஆறு பேர் கமிட்டியின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தை 12-ந் தேதி கூட்டியிருந்தார் கலைஞர். இதில் பேசிய துரைமுருகன், ""நான் மட்டும்தான் மாவட்டம்னு இனி யாரும் காலரைத் தூக்கிக்கிட்டு அலைய முடியாது. ஏன்னா, எதிர்தரப்புல நிக்கிறவரும் நானும் மாவட்டம் தான்னு காலரை உயர்த்துவார். பஞ்சுமிட்டாய் கணக்கா பதவிகளை பிச்சு பிச்சு தரப்போகிறோம்'' என்று நகைச் சுவையாக பேசினார். கிளைக்கழகம் வரை மாற்றம் நடக்க வேண்டும் என பலரும் பேசியிருக்கிறார்கள். சச்சிதானந்தம் பேசும்போது,  ""மாவட்டம் தொடங்கி கிளைக்கழகம் வரை மாத்தியே ஆகணும். ஏன்னா, கிளைக்கழக தேர்தலை நடத்த தலைமைக்கழகத்தில் இருந்து வந்தவர்கள் அனைவரும் மாவட்ட செயலாளர் தந்த லிஸ்ட் டை அப்படியே ஓ.கே.பண்ணிட்டு போய் விட்டனர். இப்போ நடந்த நாடாளுமன்ற தேர் தலில் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திலுள்ள ஒரு பூத்தில் மொத்தம் 552 ஓட்டுக்கள் விழுந்திருக்கிறது. இதில் 46 வாக்குகள் மட்டும் தி.மு.க.வுக்கு. ஆனா, அங்க இருந்த கிளைக் கழகத்தில் தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக் கை 150. அப்படின்னா பார்த்துக்கோங்க. இத்த னைக்கும் எல்லா பூத்துக்கும் தந்தது போல இங்கேயும் பூத் செலவுக்கு 40 ஆயிரம் தந் தோம். ஆனா, ரிசல்ட் மட்டும் இல்லே. யாருமே வேலை பார்க்கலை'' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து, மாவட்ட எல்லைகளை எப்படி மாற்றியமைக்கலாம் என விவாதித்தனர். ஒவ்வொரு மாவட்டத்தில் அடங்கிய சட்ட மன்ற தொகுதிகள், அதன் எல்லைகளை எடுத்து வைத்துக் கொண்டார்கள். முதலில் 10-க்கும் மேற்பட்ட தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களை எடுத்துக் கொண்டனர். மதுரை, வேலூர், கோவை, திருவள்ளூர், நெல்லை, சேலம், விழுப்புரம் மாவட்டங்கள் ஆராயப்பட்டன. தென்மாவட்ட எல்லைகள் பற்றி தங்கம் தென்னரசுவிடமும் ராதாகிருஷ் ணனிடமும் விவாதித்தார்கள் சச்சிதானந்தமும், திருவேங்கடமும். அதேபோல வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் பற்றி இவர்களிடம் அவர்கள் விவாதித்தனர். கூட்டம் முடிந்து வெளியே வந்த குழுவினரிடம், ""அண்ணே, கட்சியை பாதுகாக்க நல்ல வாய்ப்பு. தொண்டர்களின் விருப்பத்துக்கும் எதிர்பார்ப்பிற்கும் ஏற்ற வகையில் நல்ல ரிப்போர்ட்டை தலைவரிடம் கொடுங்கள்'' என்று உடன்பிறப்புக்கள் கேட்டுக் கொண்டதை அறிவாலயத்தில் பார்க்க முடிந்தது.

மாற்றங்கள் எப்படி?

ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டமன்ற தொகுதி களின் எண்ணிக்கை ஒரே மாதிரி இருக்கவில்லை. தலைநகர் சென்னையில் 16 தொகுதிகள் இருக்கின்றன. வேலூரில் 13, காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் மாவட் டங்களில் தலா 11, திருவள்ளூர், கோவை, மதுரை, நெல்லை மாவட்டங்களில் தலா 10, திருச்சி, கடலூர் தலா 9, திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், தஞ்சை, மாவட்டங்களில் தலா 8, திண்டுக்கல், விருதுநகர் தலா 7, நாமக்கல், கிருஷ்ணகிரி, நாகை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி தலா 6, தர்மபுரி 5, கரூர், திருவாரூர், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் தலா 4, நீலகிரி 3, பெரம்பலூர், அரியலூர் தலா 2 என சட்ட மன்ற தொகுதிகள் அடங்கியிருக்கிறது. இவற்றை 3 தொகுதிகளுக்கு ஒரு மா.செ. என 72 பேரை நியமிக்க ஸ்டாலின் முடிவு செய்ய, 2 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 4 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே உள்ள மாவட்டங்களை எப்படி பிரிப்பது அல்லது சேர்ப்பது என்கிற பிரச்சினை இருப்பதாலும் சிறிய மாவட்டங் களை அப்படியே வைத்துக்கொண்டுவிட்டு மற்ற மாவட்டங்களைப் பிரித்து மொத்தம் 52 அல்லது 58 மாவட்டங்கள் வருவது போல மாற்றியமைக்கும் முடி வை எடுத்துள்ளனர். பரந்துவிரிந்து கிடந்த மாவட்ட சாம்ராஜ்யத்தை 20, 30 வருசமாக ஆட்சி புரிந்து வந்த மாவட்ட செயலாளர்களின் அதிகாரம் சுருங்கப் போகிறது. பலரின் பதவிகளும் பறிக்கப்படவிருக்கிறது என்பதை அறிந்து இப்போதே உற்சாகமாக இருக்கி றார்கள் உடன்பிறப்புகள்.              

ad

ad