புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2014

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகம் நிர்மாணிக்க நீதிமன்றம் தடை 
கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச செயலக கட்டடம் தாழ்வாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது என அக் கட்டடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான்
எஸ்.சிவபாலசுப்பிரமணியம் இன்று  இடைக்கால தடையுத்தரவு விடுத்தார்.

அத்துடன் குறித்த வழக்கினை எதிர்வரும் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

கண்டாவளைப் பிரதேச செயலகத்திற்காக புளியம் பொக்கணையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத் தொகுதியானது தாழ்வான நிலத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்து கண்டாவளைப் பிரதேச கமக்கார அமைப்பினால் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை
வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் பிரதேச செயலக சமுர்த்தி வங்கி முகாமையாளர் மற்றும் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

மேலும் இந்நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த கட்டட நிர்மாண வேலைகளை நிறுத்தும்படி இடைக்காலத் தடையுத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதியில் இந்தக் கட்டடம் நிர்மாணிக்கப்படுவதினால் வெள்ள நீரானது வடிந்தோட முடியாத நிலையேற்படும் என்பதினாலேயே வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக கண்டாவளை பிரதேச கமக்கார அமைப்பினர் தெரிவித்தனர்.

ad

ad