புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2014

மைத்திரியும் சந்திரிக்காவும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்: ஞானசார தேரர்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தல் மிகவும் தீர்மானம் மிக்கது.  மக்கள் மதிநுட்பத்துடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
யார் தேர்தலில் தோற்றாலும் அது பௌத்த பிக்குகளை பாதிக்காது. எனினும் நாட்டை பிளவுபடுத்தும் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
நாட்டில் நிலவும் அரசியல் குழப்ப நிலைமையைப் பயன்படுத்தி சிலர் தங்களது நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்த முயற்சிக்கின்றனர்.
சந்திரிக்கா குமாரதுங்க மைத்திரி என்ற பெயரைப் பயன்படுத்தி அகே வைரய திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை அரங்கேற்ற முயற்சிக்கின்றார். (அகே வைரய என்ற திரைப்படம் வயது வந்தர்வகளுக்கு மட்டுமான ஒர் திரைப்படமாகும். பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் ஆண்களை பழிவாங்குவதே இந்த திரைப்படத்தின் கதைப் பின்னணியாகும். இந்த திரைப்படம் பற்றியே கலகொடத்தே ஞானசார தேரர் செய்தியாளர் சந்தப்பில் உதாரணம் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.)
நாட்டை பாதுகாத்த தலைவரை சிறைப்படுத்தி வெளிநாட்டு சக்திகளின் தேவகைளை பூர்த்தி செய்ய முயற்சிக்கப்படுகின்றது.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தீர்மானம் அரசியல் ரீதியானது.
ஜனாதிபதி தேர்தலை கருத்திற்கொள்ளாது நாடாளுமன்றத் தேர்தலை கருத்திற் கொண்டு தீர்மானம் எடுத்துள்ளது.
ராஜபக்ச பற்றி நல்லதோ கெட்டதோ தெரிவிக்கக் கூடிய காலம் இதுவல்ல என அவர் தெரிவித்துள்ளார்

ad

ad