புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2014


ஜெ.வுக்கு தண்டனை வழங்கியிருக்கும் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்புக்கெதிரான அப்பீல் வழக்கில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஜெ. எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் புதிய புதிய திருப்பங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.


ஜெ.வுக்கு எதிராக வாதிட்ட ஆச்சார்யா தனது புத்தக வெளியீடு முடிந்தவுடன் கன்னட மற்றும் தமிழ் பத்திரிகையாளர்களிடம் நவ.15-ம்தேதி பேசும்போது... ""ஜெ. அப்பீல் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வருகிறது. அதற்காக நாடெங்கும் உள்ள பிரபல சீனியர் வழக்கறிஞர்களை ஏன் பணியில் அமர்த்த வேண்டும்?'' என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு ஆச்சர்யா இப்படி விளக்கமளித்துள்ளார். ""பொதுவாக கார்ப்பரேட் கம்பெனி கள் வழக்கில் வெற்றி பெறுவதற்காக ஒரு நடைமுறையை கடைப்பிடிக்கும். கீழ்க்கோர்ட்டில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிரான வழக்கு தோல்வியடைந்து அதில் அந்த நிறுவனத்திற்கு தண்டனை வழங்கப்பட்டால் அந்த கீழ்க்கோர்ட்டில் அந்த நிறுவனத்திற்கு எதிராக வாதாடிய வழக்கறிஞரை தங்களது கண்ட்ரோலில் கொண்டு வருவார்கள். அவரை தங்களது வக்கீலாக அமர்த்த மாட்டார்கள். ஆனால் அவர் தங்களுக்கு எதிராக ஆஜரானால் எவ்வளவு தொகை ஃபீஸாக கிடைக்குமோ அதைவிட பல மடங்கு தொகையை அவருக்கு ஃபீஸாக கொடுத்து அவர் தங்களுக்கு எதிராக வாதாடாமல் முடக்கி வைப்பார்கள். அதே பாணியில் இந்தியா முழுவதும் பெரிய வழக்கறிஞர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பெரும்தொகையை கொடுத்து அவர்கள் எதிராக வாதிடக் கூடாது என ஜெ. முடக்கி வைத்துள்ளார்'' என்றார் ஆச்சார்யா.




"உங்களை அப்படி யாராவது அணுகினார்களா?' என கர்நாடக பத்திரிகை யாளர்கள் கேட்டதற்கு... ""என்னை அணுக முயற்சித்தார்கள். அவர் களிடம் நான் ஜெ.வுக்கு சாதகமாக வாதிட மாட்டேன். அவருக்கு எதிராக வாதிட கர்நாடக உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ உத்தரவிட்டால், வாதிடத் தயாராகவுள்ளேன்'' எனச் சொன்ன ஆச்சார்யா, ""மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பை உடைப்பது மிக கடினம். அதற்காக கடுமையாக முயற்சி செய்யும் ஜெயலலிதா அந்த முயற்சியில் உச்சநீதிமன்றம் வரை தொட்டுவிட்டார். அவருக்கு ஜாமீன் கிடைத்த விவகாரத்தில் இது தெளிவாகத் தெரிந்தது'' என்றார்.

"இப்படி ஒரு பக்கம் கடினமாக முயற்சி செய்யும் ஜெ.வுக்கு கை கொடுக்க பா.ஜ.க. மேலிடம் முன்வந்திருக்கிறது' என்கிறார்கள் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள். 

சசியும் ஜெ.வும் பங்குதாரர்களாக இருக்கும் சசி எண்டர்பிரை சஸ் நிறுவனம் 92-93, 93-94 ஆகிய இரு ஆண்டுகளுக்கும் வரு மானவரியைக் கட்டவில்லை. இதை எதிர்த்து 1997-ஆம் ஆண்டு வருமானவரித்துறை வழக்கு தொடர்ந்திருக்கிறது. அதை ரத்து செய் யும் வேண்டுகோளுடன் ஜெ. சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந் தார். சுப்ரீம் கோர்ட் "2014-ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த வழக்கை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும்' என ஆணையிட்டது.

பிரதமராக பொறுப்பேற்று மோடி சென்னைக்கு வந்தபோது அவரை விமான நிலையத்தில் சந்தித்த ஜெ. "இந்த வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை முடித்து கொடுக்க வேண்டு'மென கேட்டுக் கொண்டார்.

ad

ad