புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2014

மைத்திரிபாலவுக்கு ஆதரவு தர ததேகூவுக்கு கோரிக்கை
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான மைத்ரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவித்து ஜாதிக ஹெல உறுமய உடன்பாடு ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளது.
எதிரணியில் பௌத்த கடும்போக்கு அமைப்புகள் என்று கருதப்படும் கட்சிகளும், அமைப்புகளும் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு நிலைப்பாடு என்ன என்பது இன்னும் தெரியாத சூழலே உள்ளது.
இந்நிலையில் நாட்டில் ஆட்சி மாற்றம் தேவை என்றும் அதை ஏற்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டி அவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது என்றும் அக்கட்சியின் துணைத் தலைவர் டி எம் சுவாமிநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அந்த விஷயம் தொடர்பில் சில நெருடல்கள் இருக்கின்றன என்றும் அவற்றை களையும் வகையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன என்றும், தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர்கள் எனக் கருதப்படும் ஹெல உறுமய, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவை தமது அணியில் உள்ளன என்பதை தாங்கள் உணர்ந்துள்ளதாகவும் சுவாமிநாதன் தெரிவித்தார்.
தேர்தலுக்கு பிறகு விட்டுக் கொடுப்புகள் பேச்சுவார்த்தை மூலம் சாத்தியம் எனவும் அவர் கூறுகிறார்.
அதேபோல மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கக் கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் தமது தரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே மாகாண சபைகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் கொடுக்கும் எந்தப் பிரேரணையையும் தான் எதிர்ப்பதாகவும், முழுமையான சமஷ்டி முறை இலங்கையில் சாத்தியமில்லை என்றும் மைத்ரிபால சிறிசேனா கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சுயாதீனமாக பிபிசியால் உறுதிசெய்ய முடியவில்லை.

ad

ad