புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2015

சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கைகலப்பு - கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன நியமனம்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் இன்று கைகலப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செயறக்குழுக் கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் மோதல்
சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தேர்தல் தோல்வியின் பின்னர் நடைபெற்ற முதலாவது சந்திப்பில் இவ்வாறு முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு சில தரப்பினர் முயற்சித்துள்ளனர்.
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியின் தலைவராக நியமிப்பதற்கு ஆதரவான தரப்பினருக்கும் எதிரான தரப்பினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன நியமனம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டதாக முன்னாள் கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமித்ததாகத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டதுடன், கட்சியின் தேசிய அமைப்பாளராக ஜனக பண்டார தென்னக்கோனும், கட்சியின் பொருளாளராக எஸ்.பி. நாவின்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் முன்னாள் தலைவர்களான சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் கட்சியின் போசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள் கட்சியின் யாப்புகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் உறுப்புரிமையை இடைநிறுத்த கட்சி செயற்குழு எடுத்த தீர்மானம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ad

ad