புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2015

மகிந்த எதிர்கட்சி தலைவர் ஆவதில் சட்டச் சிக்கல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதில் சட்டச் சிக்கல் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஐ.ம.சு. கூட்டமைப்பு சார்பாக 2011ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தேசியப் பட்டியலில் மகிந்த ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படாததே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் உரிமைபெற்று எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை பெறுவதில் சட்டச்சிக்கல் உருவாகுவதற்கு காரணமாகும்.

இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வாவே எதிர்க்கட்சித் தலைவராக நியிமக்கப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேட உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

எவ்வாறாயினும், மகிந்த ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

எல்லாவல மேதானந்த தேரரே இவ்வாறு தமது பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரியவருகிறது.

ad

ad