புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மார்., 2015

கச்சதீவு அந்தோனியாரின் அருள்பெற 7ஆயிரம் பக்தர்கள்


வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் கொடி இறக்கலுடன் நிறைவடைந்தது. 

 
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் தவக்காலம் ஆரம்பித்து வருகின்ற இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். அந்தோனியாரின்  அருள்வேண்டி இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்தும்  பக்தர்கள்  வருகை தருவார்கள்.
 
இவ்வாண்டு உற்சவத்திற்கு இரு நாடுகளிலும் இருந்து 7ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள்  கலந்து கொண்டனர். 
 
நேற்று முன்தினம்  ஆராதனைகள் நடைபெற்று மாலை 5.30 மணிக்கு நெடுந்தீவு பங்குத்தந்தை நேசநாயகம் கொடியினை ஏற்றி உற்சவத்தினை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து இந்திய மற்றும் இலங்கை குருமார்கள் சிலுவையை சுமந்து சிலுவைப்பாதையினை ஈடுபட்டனர்.
 
அதனையடுத்து அந்தோனியாரின் திருச்சொரூபம் தேர்ப்பவனியாக உலா வந்ததுடன் திருப்பலியுடன்  நிறைவுபெற்றது. 
 
மீண்டும் நேற்றுக்காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகிய ஆராதனை வழிபாடுகள் யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் இந்தியாவில் இருந்து வருகைதந்தை அருட்தந்தை சகாயராஜ் தலைமையில் நடைபெற்றன. 
 
மேலும் கொடியிறக்கப்பட்டு இருநாட்டு மக்களது சமாதானம் மற்றும் உலக மக்களது சமாதானம் வேண்டி விசேட ஆராதனைகளும் இடம்பெற்றன. இறுதியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் வழங்கப்பட்டு பெருவிழா நிறைவடைந்தது. 
 
நேற்றைய ஆராதனையில் இந்திய உயர் அதிகாரிகள் , கடற்படை கடற்படை அதிகாரிகள் , யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் நடராஜன் , ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி லெனின்குமார் , பொலிஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=771063897302789490#sthash.8shunaOb.dpuf

ad

ad