மலேசிய தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் மற்றும் அந்நிறுவனத்தின் சிஇஓ ரால்ப் மார்செல் ஆகியோர் ஆஜராகவில்லை.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகிய மாறன் சகோதர்கள், முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். முன் ஜாமீன் மனு மீது சிபிஐ வரும் 16-ல் விளக்கமளிக்கிறது. இதனையடுத்து, முன் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டோர் திங்கள்கிழமை ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அவர்கள் ஆஜராகினர்.
தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சி.சிவசங்கரனுக்கு நிர்பந்தம் அளித்து மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவன பங்குகளை விற்கச் செய்தார் என்று சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தகக்து.