புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மார்., 2015

உட்கட்சித் தேர்தல் களேபரம்: திமுகவை விஞ்சத் துடிக்கும் அதிமுக!


அரியலூர் மாவட்டம், அரியலூரில் நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் ஏற்பட்ட அமளி, அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக உட்கட்சித் தேர்தல் என்றாலே அமளிதுமளி, கலவரம்
என அல்லோலகப்படும்  ஆனால் மற்ற கட்சிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிர்வாக முறை கொண்ட அதிமுகவில்,  ஜெயலலிதாவை மீறி யாரும் தன்னிச்சையாக செயல்படவோ ஜெயலலிதாவின் விருப்பத்திற்கு மாறாக பதவிக்கு வரும் முயற்சிகளிலோ ஈடுபட முடியாது என்பது அக்கட்சியின் எழுதப்படாத ஜனநாயகம். ஆனால் அங்கும் திமுகவிற்கு சவால் விடும் செயல்பாடுகள் தெரியத் துவங்கிவிட்டன ஆச்சரியமாக.
ஆண்டிமடத்தில் கிளைக் கழகத்தேர்தலின்போது அதிமுகவினர் மோதிக்கொண்ட சம்பவம், உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில்  வரதராஜன் பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான அதிமுக கிளைக் கழகத்தேர்தல், சனிக்கிழமை நடைபெற்றது. வரதராஜன் பேட்டை செயலாளராகவும், பேரரூட்சிக்கு தலைவராகவும் கடந்த இருபது வருடமாக இருந்து வருகிற லாரன்ஸ் என்பவருக்கு எதிராக அதிமுகவின் மற்றோரு அணி பல உள்ளடி வேலைகளை செய்து வந்தன.

கடந்த சனிக்கிழமையன்று தேர்தலை நடத்துவதற்காக மனுக்களை பெற்றுக்கொண்டிருந்தனர் அமைச்சர் ரமணா உள்ளிட்ட குழுவினர். அவர்களிடம் இளைஞரணி செயலாளர் ஸ்டிபன் ராஜ்ஜீன் ஆதரவாளர்கள் லாரன்ஸ் பதவி பெறுவதை எதிர்த்து கடுமையான சில வார்த்தைகளை அமைச்சர் முன்பு சொல்ல, லாரன்ஸ் ஆதரவாளர்கள் அதற்கு பிரச்னை செய்து வாக்குவாதம் செய்தனர்.
இதனால் அமைச்சர் முன்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எவ்வளவோ தடுத்தும் இருதரப்பினரும் சமாதானம் அடையாமல் வாக்குவாதம் செய்ததால் எரிச்சலான அமைச்சர் ரமணா, கடுகடுத்த முகத்தோடு காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்று விட்டார். 

மேலும் மோதல் தொடராமல் இருக்க,  இருதரப்பினரையும் தனி இடம் ஒன்றில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் அமைச்சர் ரமணா என்கிறார்கள்.

ad

ad