புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2015

கி.பி அரவிந்தன் பிரான்சில் காலமானார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆரம்பகாலங்களில் ஈடுபட்டவர்களில் ஒருவரும் பிரபல கவிஞருமான
கி.பி அரவிந்தன் (1953 – 2015) பிரான்சில் காலமானார். கடந்த ஐந்து வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கவிஞர் கி.பி அரவிந்தன் பிரான்சில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமாகியுள்ளார்.
ஈரோஸ் இயக்க உறுப்பினராக செயற்பட்ட கி.பி அரவிந்தன் போராட்ட செயற்பாடுகள் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார். 1972 இல் கைது செய்யப்பட்டதுடன் 1976இல் நாட்டை விட்டு வெளியேறினார்.
யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகக் கொண்ட கி.பி அரவிந்தன் 1990களில் பிரான்சில் குடியேறினார் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைக்காக பல்வேறு பணிகளை ஆற்றி வந்தார்.
அதிகமும் புலம்பெயர் கவிஞராக அறியப்பட்ட கி.பி அரவிந்தன் ஈழ தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு இடத்தை வகிக்கின்றார்.  இவரது கவிதைகள் புலம்பெயர் வாழ்வையும் அதன் முகங்களையும் ஈழப் போராட்டத்தின் நியாயங்களையும் எடுத்துரைப்பதில் முக்கியம் பெறுகின்றன.
அப்பால் தமிழ் என்ற இணையத்தளத்தை நடத்தியிருந்ததுடன் பரதேசிகளின் பாடல் என்ற பெயரற்ற புலம்பெயர் கவிதைகள் வெளிவருவதற்கு காரணமாகவும் இருந்தார்.

ad

ad