புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2015

நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதியின் கவனம்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறை ஒழித்து, அரசியலமைப்பில் திருத்தங்களை செய்வதற்காக மக்களின் ஆணையை பெற்றுக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து விட்டு தேர்தலை நடத்துவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றால், அதற்காக மக்களின் ஆணையை பெற்று பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கத்தை அமைப்பதற்காகவே தேர்தலுக்கு செல்வது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் திரும்பியுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு அமைய ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்தால், 58 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் கிடைக்கும் வாய்ப்பை இழப்பர். இதன் மூலம் பெருந்தொகை பணத்தை அரசாங்கம் மீதப்படுத்த முடியும் என திறைசேரி சுட்டிக்காட்டியுள்ளது.
நாடாளுமன்றம் ஏப்ரல் 23ம் திகதிக்கு முன்னர் கலைக்கப்பட்டால், நாமல் ராஜபக்ச, திலும் அமுனுகம, உதித்த லொக்குபண்டார, தயாஸ்ரீத திசேரா, லொஹான் தளுவத்த, சனத் ஜயசூரிய, திலங்க சுமதிபால உட்பட முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் ஓய்வூதியம் கிடைக்கும் வாய்ப்பை இழப்பார்கள்.
இங்கிலாந்து சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடு திரும்பியதும், இது சம்பந்தமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, தூய்மையான நாளை அமைப்பின் ஸ்தாபகர் அத்துரலியே ரத்ன தேரர், மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக தெரியவருகிறது.
அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதன் மாத்திரமே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய 62 லட்சம் மக்கள் வழங்கிய வாக்குகளை முழுமையாக பயன்படுத்த முடியும்.
இதற்கு எதிர்க்கட்சிகள் தடையாக இருந்தால், புதிய ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக பொதுத் தேர்தலுக்கு சென்று பெரும்பான்மை பலத்துடன் கூடிய அரசாங்கத்தை அமைப்பதே ஒரே மாற்று வழி என சட்ட ஆலேசாகர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு மற்றும் தூய்மையான நாளை அமைப்பு ஆகியவற்றின் யோசனைகளை அடிப்படையாக கொண்டு நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க மக்கள் ஆணையை பொதுத் தேர்தல் மூலம் பெற, பொதுக் கட்சி ஒன்றின் ஊடாக புதிய மக்கள் சக்தியை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட உள்ளதாக தெரியவருகிறது.

ad

ad