புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2015

விக்கெட் கீப்பராக டோனியின் அபூர்வ செயல்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி, காலுறை இன்றி (பேடு) சிறிது நேரம் கீப்பிங் பணியை மேற்கொண்டது, அனைவரையும் புல்லரிக்க வைத்தது. ஆட்டத்தின் 14–வது ஓவரை அஸ்வின் வீசிக் கொண்டிருந்த போது, பந்து பவுன்ஸ் ஆவதை பார்த்த டோனி, சில்லி பாயிண்ட் திசையில் நெருக்கமாக ரஹானேவை நிறுத்தி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டார். ஆனால் காலில் பேடு இல்லாமல் நிற்க வைப்பது ஆபத்து என்பதால், புதிய பேடை வரவழைக்க டோனி நடுவரிடம் அனுமதி கேட்டார். ஆனால் ஓவரின் பாதியில் இவ்வாறு கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது என்று நடுவர் கூறினார்.

இதையடுத்து தனது தற்காப்பு பேடை கழற்றிக் கொடுத்து ரஹானேவை அணியச் செய்தார். டோனி காலுறை இன்றி தைரியமாக கீப்பிங் செய்தார். கிரிக்கெட் உலகில் விக்கெட் கீப்பர் பாதுகாப்பு கவசமான காலுறை இல்லாமல் கீப்பிங் செய்வது அபூர்வமான ஒரு நிகழ்வாகும். 4 பந்துகள் இவ்வாறு கீப்பிங் செய்த டோனி, அந்த ஓவர் முடிந்ததும் புதிய பேடுகள் வரவழைக்கப்படவே, அதன் பிறகு தனது பேடுகளை வாங்கி மாட்டிக் கொண்டார்.

ad

ad