புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2015

ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்த தில்ஷன்



உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் 32வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், இலங்கையும் விளையாடி வருகின்றன.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 376 ரன்களை குவித்தது. இதையடுத்து வெற்றிக்கு 377 ரன்கள் தேவை என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. 2வது ஓவரில் திரிமன்னே அவுட்டானா போதும் சங்ககாராவும், தில்ஷனும் அதிரடியாக விளையாடி வருகின்றனர். இலங்கை இன்னிங்சில் 6வது ஓவரை மிட்சல் ஜான்சன் வீசினார். அவர் வீசிய ஓவரில் 6 பந்துகளையும் தொடர்ந்து பவுண்டரிக்கு விரட்டினார் தில்ஷன்.

தொடர்ந்து அடுத்த ஓவரிலும் தான் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் தில்ஷன். அவரது அதிரடி மேலும் தொடர்ந்து வருகிறது

ad

ad