புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2015

சுட்டுக்கொல்லப்பட்ட எட்டு பேரும், கடைசி நிமிடம் மன்னிக்கப்பட்ட பெண் கைதியும்
இந்தோனேஷியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட எட்டு பேரும், கடைசி நிமிடம் மன்னிக்கப்பட்ட பெண் கைதியும்
மயூரன் சுகுமாரன், அன்ட்ரு சான், மேரி ஜேன் வெலோசோ, மார்ட்டின் அன்டர்சன்,
இரண்டாவது வரிசையில் இடமிருந்து வலமாக:
ரஹீம் சலாமி, சில்வெஸ்டர் வொலிசே, ரொட்ரிகோ குலார்த்தே, சேர்கி அற்லூயி
1. மயூரன் சுகுமாரன் : 34 வயதுடைய அவுஸ்திரேலியப் பிரஜை. இவர் இலங்கை வம்சாவளித் தமிழர். சிட்னியில் பெற்றோருடன் வசித்து வந்தவர். 2005ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். சிறைச்சாலையில் வரையும் திறமைகளை வளர்த்துக் கொண்ட மயூரனின் ஓவியங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தன.
2. அன்ட்ரூ சான்: 31 வயதுடைய அவுஸ்திரேலியப் பிரஜை. சீன வம்சாவளியைச் சேர்ந்தவர். போதைப்பொருள் வைத்திருக்காவிட்டாலும், அதனைக் கடத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்காக மயூரனுடன் கைது செய்யப்பட்டார். சிறை வாழ்க்கை தம்மை மாற்றிய நிலையில், மதப் போதகராக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டவர். மரணதண்டனைக்கு முந்தைய நாள் தமது காதலியைக் கரம்பற்றினார்.
3. மேரி ஜேன் வெலோசோ: 30 வயதுடைய பிலிப்பைன்ஸ் பெண்மணி. 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். போதைப்பொருள் பொதிகளை கொண்டு செல்பவராக சித்தரிக்கப்பட்டவர். இவரது வறுமை ஆட்கடத்தல்காரர்களின் வலையில் சிக்க வைத்ததென நண்பர்கள் கூறுகிறார்கள். மேரிக்கு 12 மற்றும் 6 வயதில் இரு மகன்மார் உள்ளனர். இவரது தண்டனை கடைசி நிமிடத்தில் ரத்துச் செய்யப்பட்டது.
4. மார்ட்டின் அன்டர்சன்: 50 வயதான நைஜீரியப் பிரஜை. போலி கடவுச் சீட்டில் இந்தோனேஷியா சென்றவர். 2004ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
5. ரஹீம் சலாமி: 50 வயதானவர். இவரும் நைஜீரியாவைச் சேர்ந்தவர். பாங்கொக்கில் நிர்க்கதியாக வாழ்ந்தவர். இந்தோனேஷியாவிற்கு கொஞ்சம் ஆடைகளை கொண்டு சென்றால், 400 டொலர்கள் தருவேன் என்று கூறிய புதிய நண்பனை நம்பி ஏமாந்தவர். எனினும், ஆடைகளுக்குள் போதைப்பொருள் இருந்ததைத் தாம் அறிவேனென அவர் கூறியிருந்தார்.
6. சில்வெஸ்டர் வொலிசே: 47 வயதானவர். நைஜீரியப் பிரஜை. 2002 இல் கைதாகியிருந்தார். இந்தோனேஷியாவிற்குள் போதைப்பொருளைக் கடத்திய குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர். இவரது வழக்கு விசாரணையில் மொழிபெயர்ப்பாளரின் உதவி வழங்கப்படவில்லையென மனைவி கூறியிருந்தார்.

ad

ad