புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2015

இலங்கையில் வரலாற்றுத் திருப்புமுனை! 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்


19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மைத்திரி அரசின் நூறு நாள் திட்டத்தில் அடங்கிய 19 ஆவது திருத்தச் சட்டம் நேற்று நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து இன்றும் விவாதிக்கப்பட்டு - திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதன்போது 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 215 பேரும் எதிராக ஒருவரும் வாக்களித்தனர். 7 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இன்றைய வாக்கெடுப்பின் போது ஜானக பண்டார, ஜகத் பாலசூரிய, எல்லாவல மேதானந்த தேரர், கெஹலிய ரம்புக்வெல்ல, பசில் ராஜபக்‌ஷ, விநாயகமூர்த்தி, பிரேமலால் ஜயசேகர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.
இதேவளை டொக்டர். சரத் வீரசேகர 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தார். பாராளுமன்ற உறுப்பினர் அஜித் குமார வாக்களிக்கவில்லை.
எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் உள்ளடக்கப்படும்! மூன்றாம் வாசிப்பு விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது
இலங்கையின் நாடாளுமன்றத்தில் 19வது அரசியலமைப்பு திருத்த யோசனைகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்கள் தற்போது விவாதிக்கப்பட்டு சட்டமூலத்தில் இணைக்கப்படுகின்றன.
இதனுடன் இணைந்ததாக சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
மொத்தமுள்ள 59 சரத்துக்களும் வாசிக்கப்பட்டு அவற்றில் எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் உள்ளடக்கப்படுகின்றன.
இந்தநிலையில் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்னும் சில மணிநேரங்களில் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையிலேயே 19வது அரசியல் அமைப்பு திருத்தத்தின் நிறைவேற்றம் குறித்த முடிவுகள் வெளியாகும்.

ad

ad