ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் ஆச்சார்யா நியமனம்: நீதி வென்றிருக்கிறது என விஜயகாந்த் பதில்
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் நீதி வென்றிருக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்றிருந்த அவர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் நீதி வென்றிருக்கிறது. அதிமுகவினர் ஜெயலலிதாவைப் பற்றிய பேச்சு வரக்கூடாது என்பதற்காக விவாத மேடையில் பவானி சிங்கை எடுத்துவிட்டு விஜயகாந்த்தை கொண்டு வந்துவிட்டனர். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்பதுபோல், எந்த ஆச்சார்யா வேண்டாம் என்றார்களோ அந்த ஆச்சார்யாவே வந்துவிட்டார். அவர் குன்ஹா கொடுத்த தீர்ப்பை கொடுங்கள் என்கிறார். இதற்கு மேல் என்ன வேணும்.
அனைத்துக் கட்சியினருடன் டெல்லியில் பிரதமரை சந்தித்தது வெற்றிக்கரமாக அமைந்தது. கூட்டணி தொடர்பாக திமுக தலைவர் கலை