புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2015

7 மணி நேரம் சடலம் போல் படுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்



 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பனங்காடு பகுதியில் வேட்டைக்காரசாமி மாசடச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பொங்கல் விழா கடந்த 12ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் அம்மன் அழைப்பு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வேட்டை காரசாமியும், மாசடச்சி அம்மனும் பரிவார தெய்வங்களுடன் ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து அன்று இரவு அண்ணன், தங்கை பாசத்தை வீரத்துடன் கூறும் அண்ணமார் என்ற பொன்னர்-சங்கர் வீர வரலாற்று கதையை நாட்டுப்புற பாடலாக உடுக்கை இசையுடன் நடனக்கலைஞர்கள் பாடத் துவங்கினர்.

உச்சகட்டமாக கதை கேட்க சுற்றிலும் கூடி இருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் திடீரென அப்படியே தரையில் சாய்ந்தனர். நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு தரையில் விழுந்த பக்தர்கள் நேற்று காலை 5 மணி வரை 7 மணி நேரம் அசைவற்ற நிலையில் சடலம் போல் கிடந்தனர். பின்னர் அவர்களை தீர்த்தம் தெளித்து எழுப்பினர். 

வினோதமான இந்த வழிபாட்டை அடுத்து 300 ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டு பொங்கல் வைத்து அனைவருக்கும் விருந்து கொடுக்கப்பட்டன. இதன்பிறகு அம்மனை தாய்கோவிலுக்கு அனுப்பி வைத்தனர். விழாவில் பங்கேற்ற பொன்குலுக்கி நாட்டவர் மீண்டும் 3 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திப்போம் என கூறி பாசத்துடன் பிரியா விடை பெற்று சென்றனர். திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ad

ad