புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2015

சுழலில் மிரட்டிய ஹேராத் 7 விக்கெட்.. இந்தியா அணிக்கு ஏமாற்றம்: 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி (வீடியோ இணைப்பு)

லங்கையின் எளியை இலக்கை விரட்ட முடியாமல் இந்திய அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தேல்வியடைந்துள்ளது.
காலேயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அஸ்வின் சுழலில் 183 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதில் அணித்தலைவர் மேத்யூஸ் (64), சந்திமால் (59) அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களிலே வெளியேறினர். இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பின்னர் தன் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அணித்தலைவர் விராட் கோஹ்லி (103), ஷிகர் தவான் (134) ஆகியோரின் அபார சதத்தால் 375 ஓட்டங்கள் குவித்தது.
இதைத் தொடர்ந்து 192 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி ஆரம்பதிலே திணற தொடங்கியது. இதனால் 367 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
கடைசி வரை தூண் போல் நின்று விளையாடிய சந்திமால் 162 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சங்கக்காரா (40), திரிமன்னே (44), முபாரக் (49) ஆகியோர் ஓரளவு ஓட்டங்கள் குவித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு 176 என்ற எளிய ஓட்டங்கள் வெற்றி இலக்காக கொடுக்கப்பட்டது.
3வது நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ராகுல் (5) ஏமாற்றினார். இதனால் 1 விக்கெட் இழந்த நிலையில் 23 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹேராத் பந்தில் திணறிய ரோஹித் (4), இஷாந்த் (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
முதல் இன்னிங்சில் சதம் விளாசிய தவான் (28), அணித்தலைவர் கோஹ்லி (3)கவுஷால் பந்தில் ஆட்டமிழந்தனர்.
சஹா (2), ஹர்பஜன் (1), அஸ்வின் (3), மிஸ்ரா (15) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வரிசையாக நடையை கட்டினர்.
கடைசி வரை போராடிய ரஹானே 36 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 112 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
வருண் ஆரோன் (1) ஆட்டமிழக்காமல் இருந்தார். சுழலில் இந்திய அணியை திணறடித்த ஹேராத் 7, கவுஷால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
கடைசி நேர சொதப்பலால் இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் இலங்கை அணி டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

ad

ad