புதன், பிப்ரவரி 03, 2016

ஆறு வருடங்களில் 31, 127 கோடி திருடிய மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது செலவாக கடந்த ஆறு வருட காலப்பகுதியில் 31127 கோடி ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதா
க நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டத்தினை நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு 634 கோடி ரூபாய் பணமும், 2010ம் ஆண்டு 756 கோடி ரூபாய் பணமும், 2011ம் ஆண்டு 5063 கோடி ரூபாய் பணமும், 2012ம் ஆண்டு 5936 கோடி ரூபாய் பணமும் 2013ம் ஆண்டு 8244 கோடி ரூபாய் பணமும், 2014ம் ஆண்டு 10,494 கோடி ரூபாய் பணமும் ஜனாதிபதி மஹிந்தவிற்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், 2015ம் ஆண்டுக்காக 9593 கோடி ரூபாயினை செலவிட திட்டமிடப்பட்டிருந்தாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புதிய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபாலவின் செலவிற்காக 256 கோடி ரூபாயினை மட்டும் செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.