புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2016

பொலிஸ் நிதிமோசடி பிரிவு கலைக்கப்படாவிட்டால் பதவிகளை ராஜினாமா செய்வோம்!

நிதி மோசடி பொலிஸ் பிரிவை கலைத்துவிட வேண்டும் என்று கோரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல பிரதியமைச்சர்கள், ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளனர்.
குறித்த பிரதியமைச்சர்கள் இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றனர்.
இதன் பின்னர் ஊடகங்களிடம் பேசிய போதே பிரதியமைச்சர்கள் நிதி மோசடி பிரிவை கலைக்க ஜனாதிபதியிடம் கோரப் போவதாக தெரிவித்தனர்.
நிதி மோசடி பொலிஸ் பிரிவு சட்டரீதியற்றது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தநிலையில் தமது கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாது போனால் தாம் பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாகவும் பிரதியமைச்சர்கள் எச்சரித்தனர்.
சுமேதா ஜி ஜெயசேன, சுசந்த புஞ்சிநிலமே, நிமல் லன்சா, அநுராத ஜெயரட்ன, நிசாந்த முத்துஹெட்டிகம ஆகியோரும் இந்தக் குழுவில் அடங்கியிருந்தனர்

ad

ad