புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2016

கே.பிக்கு புலிகளுடன் உள்ள தொடர்பு குறித்து மீண்டும் விசாரணை

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன்,விடுதலைப் புலிகளுடன் உள்ள தொடர்புகள் குறித்து தொடர் விசாரணை நடத்தப்படுவதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன்,விடுதலைப் புலிகளுடன் உள்ள தொடர்புகள் குறித்து தொடர் விசாரணை நடத்தப்படுவதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைது செய்து, உரிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு ஜே.வி.பியின் பிரசார செயலாளர் சுனில் ஹந்துன்நெத்தி தாக்கல் செய்த மனு இன்று (03) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் விஜித் மலல்கொட ஆராய்ந்தார்.
இதன்போது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்த சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, விடுதலைப் புலிகளுக்கும், குமரன் பத்மநாதனுக்கும் இடையில் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ad

ad