புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2016

லங்காசிறி: புதிய முதன்மை செயல் அதிகாரியாக திரு சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களை நியமித்துள்ளது!



அரிட்மட் நிறுவனத்தில் பிரபலமான பல இணயத்தளங்கள் உள்ளன. இதில் லங்காசிறி, தமிழ்வின், மனிதன், சினி உலகம், லங்காசிறி FM போன்ற இணையங்கள் மக்களால் விரும்பப் பட்டவையாக இருக்கின்றன.
உலகத்தமிழர்களின் இதயத் துடிப்பாக விளங்கிக்கொண்டிருக்கும் லங்காசிறி 2015ஆம் ஆண்டில் 1.5 billion பார்வைப் பதிவுகளைப் பெற்றிருக்கின்றது. லங்காசிறியினுடைய வாசகர்களாகிய உங்களை மகிழ்விப்பதற்கும், உங்களுக்கு சேவை வழங்குவதற்கும் உலகம் முழுவதிலும் 120க்கும் மேற்பட்ட பணியாளர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் லங்காசிறியினுடைய தலைமை நிறுவனமான அரிட்மட், திரு சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களை புதிய முதன்மை செயல் அதிகாரியாக நியமித்துள்ளது.
2016ஆம் ஆண்டின் முதலாவது படியாக, கனடாவில் புகழ்பெற்ற நினைவுகள் நிறுவனத்தினுடன் லங்காசிறி ஒரு கூட்டிணைப்பை உருவாக்கி உள்ளது. நினைவுகள் நிறுவனம், கனடாவில் நடக்கக் கூடிய அனைத்து நிகழ்வுகளுக்கும் சென்று, சிறப்பாக புகைப் படமெடுத்து, தமிழர்களுடைய கலை கலாச்சாரத்தை இணையத் தளத்திலே வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. இதனூடாக கனடா தமிழர்கள் மத்தியில் பெரும் மதிப்பையும் பாராட்டையும் நினைவுகள் நிறுவனம் பெற்றிருக்கின்றது.
இப்பொழுது இக்கூட்டுச்சேர்க்கை மூலம் உலகத் தமிழர்களின் நன் மதிப்பை பெற்ற லங்காசிறியும், கனடாத் தமிழர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற நினைவுகள் நிறுவனமும், எமது தமிழ் சமுதாயத்தின் பெருமையையும் கலை கலாசாரத்தையும் உலகமெங்கும் எடுத்துசெல்லக் கூடியதாக இருக்கின்றது.
நினைவுகள் நடாத்திய நிகழ்ச்சியில் இந்த கூட்டமைப்பை உத்தியோக பூர்வமாக அறிவித்ததோடு, மிக சிறப்பான பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன
வேறு பல நாடுகளில் இருக்கின்ற புகைப்படம் மற்றும் ஒலிப்பதிவுக் கலைஞர்களோடு நாங்கள் சேர்ந்து பணிபுரியவுள்ளோம். உங்களுக்கு ஆர்வம் இருந்தால் pr@lankasri.com எனும் இணையத்தள முகவரிக்கு உங்கள் விபரங்களை அனுப்பி வையுங்கள்.

ad

ad