புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2016

சானியா–ஹிங்கிஸ் ஜோடியின் வெற்றிப்பயணம் முடிவுக்கு வந்தது



சர்வதேச டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை ‘நம்பர் ஒன்’ ஜோடியை திகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சின்சினாட்டி ஓபனில் அரை இறுதியில் தோல்வி கண்ட சானியா –ஹிங்கிஸ் இணை, அதன் பிறகு தோல்வி பக்கமே திரும்பி பார்க்காமல் வெற்றிகளை குவித்து ‘வீறுநடை’ போட்டது. 41 ஆட்டங்களில் தொடர்ச்சியாக
வெற்றி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சானியா மிர்சா–ஹிங்கிஸ் கூட்டணியின் வெற்றிப் பயணத்துக்கு நேற்று முட்டுக்கட்டை விழுந்தது.
தோகாவில் நடந்து வரும் கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதி ஆட்டத்தில் சானியா–ஹிங்கிஸ் ஜோடி 6–2, 4–6, 5–10 என்ற செட் கணக்கில் ரஷியாவின் எலினா வெஸ்னினா–டாரியா கசட்கினா இணையிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது.
பெண்கள் இரட்டையரில் 1983 முதல் 1985–ம் ஆண்டில் அமெரிக்காவின் மார்ட்டினா நவரத்திலோவா–பாம் ஷிரிவெர் ஜோடி தொடர்ச்சியாக 109 ஆட்டங்களில் வெற்றி பெற்றதே உலக சாதனையாக நீடிக்கிறது. 1990–ம் ஆண்டில் நடாஷா ஸ்வெரீவா (பெலாரஸ்)–ஜானா நவோத்னா (செக் குடியரசு) இணை தொடர்ந்து 44 ஆட்டங்களில் வெற்றி கண்டது. இந்த சாதனை வரிசையில் சானியா மிர்சா–ஹிங்கிஸ் ஜோடி (தொடர்ந்து 41 ஆட்டங்களில் வெற்றி) 3–வது இடத்தை பெற்றுள்ளது. தோல்விக்கு பிறகு சானியா தனது ‘டுவிட்டர்’ வலைப்பதிவில் ‘முன்பை விட வலுவாக மீண்டும் களம் திரும்புவோம்’ என்று சூளுரைத்துள்ளார்.

ad

ad