புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2016

பா.ஜ.க.வுடனா? தி.மு.க.வுடனா? கூட்டணி பற்றி விஜயகாந்த் அவசர ஆலோசனை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேச்சு

T

எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டத்தில் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகடந்த 2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
தற்போது நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.
தனியாக போட்டியிடுவதாக அறிவித்து, அதன் முதல்–அமைச்சர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாசை முன்னிறுத்தி உள்ளது.
கிங்கா? கிங் மேக்கரா?ம.தி.மு.க.வை பொறுத்தவரையில், இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் சேர்த்துக் கொண்டு மக்கள் நல கூட்டணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளது.
தே.மு.தி.க. இந்த தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பதை கடந்த 20–ந் தேதி காஞ்சீபுரத்தில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் விஜயகாந்த் அறிவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், அந்த மாநாட்டில் விஜயகாந்த் எவ்வித முடிவையும் தெரிவிக்காமல், கிங்கா? கிங் மேக்கரா? என்ற கேள்வியை தொண்டர்கள் மத்தியில் கேட்டுவிட்டு, எவ்வித பதிலையும் தெளிவாக கூறாமல் மதில் மேல் பூனையாகவே இருந்து வருகிறார்.
திடீர் அவசர கூட்டம்இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதான கட்சியாக விளங்கும் பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளரான மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று தமிழகம் வந்து தேசிய ஜனநாயக கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். அவர் இன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பிரகாஷ் ஜவடேகரை சந்திக்கும் போது, என்ன பதில் கூறலாம் என்பது குறித்து விவாதிப்பதற்காக நேற்று மாலையில் திடீரென அவசர அவசரமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
பா.ஜ.க.–வா? தி.மு.க.–வா?இந்த கூட்டத்தின் போது, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா? அல்லது தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா? அல்லது தனித்து போட்டியிடலாமா? என்பது போன்ற கேள்விகள் மாவட்ட செயலாளர்களிடம் முன் வைக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், சட்டமன்ற தேர்தல் பணி குறித்தும், தேர்தல் காலங்களில் கட்சியினர் செயல்பட வேண்டிய முறைகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த கூட்டம், சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. ஏற்கனவே நேர்காணல் நிகழ்ச்சியின் போதும், யாருடன் கூட்டணி வைக்கலாம்? என்ற கேள்வியை விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தே.மு.தி.க. பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் ப.பார்த்தசாரதி எம்.எல்.ஏ., கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ad

ad