புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2016

வட மாகாண சபை அமைச்சரவை மாற்றம் : சம்பந்தன் நிராகரிப்பு

வட மாகாண சபை அமைச்சர்களை மாற்றி அந்த இடத்துக்கு புதியவர்களை நியமிக்க வேண்டும் என விடுக்கப்பட்டுவரும் கோரிக்கையை தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார்.
மாகாண சபையின் சில குறைபாடுகள் குறித்த விமர்சனங்கள் இருக்கலாம் எனவும் இரா.சம்பந்தன்தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட வட மாகாண சபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெயநாதன், வடக்கு மாகாண அமைச்சர்களை மாற்ற வேண்டும் என  16 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் கையளித்தார்.
முதலமைச்சர், நான்கு அமைச்சர்கள், அவைத் தலைவர் உள்ளிட்ட 6 பேர் நீங்கலாக உறுப்பினர்களாக உள்ள 24பேரில் 16 பேர் அமைச்சரவை மாற்றத்தை ஆதரிப்பதாக அன்ரனி ஜெயநாதன் கூட்டமைப்பின் தலைவரிடம் தெரிவித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், அமைச்சரவையை மாற்ற வேண்டுமாயின் ஒட்டுமொத்தமாக நான்கு அமைச்சர்களையும் மாற்ற வேண்டும் என குறிப்பிட்டார்.
ஒரு சிலரை இலக்குவைத்து அமைச்சரவையை மாற்றும் முடிவை அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான வாதப் பிரதிவாதங்களின் பின்னர் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மாகாண சபையில் சில குறைபாடுகள் இருப்பதான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டார்.
அது முதலமைச்சர் அல்லது அமைச்சர்களின் விணைத்திறன் அற்ற செயற்பாடுகளால் ஏற்பட்டதென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என  தெரிவித்தார்.

ad

ad