புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2016

வட,கிழக்கு இணைப்பு முஸ்லிம்களுக்கு தேவையில்லை- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற தேவை முஸ்லிம் மக்களுக்கு இல்லை என்று விளையாட்டுத்துறை
பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – கல்முனை சாஹிரா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
வடமாகாண சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள இனப்பிரச்சினை தொடர்பான தீர்வுத்திட்ட யோசனை முஸ்லிம் மக்களை ஒருபோதும் திருப்திப்படுத்தாது என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் குந்தகம் விளைவிக்கும் நோக்குடன் செயற்படாது என்றும் பிரதியமைச்சர் ஹாரிஸ் தெரிவித்தார்.

ad

ad