புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2016

கிளிநொச்சியில் முதியோர்களை மகிழ்வூட்டும் புதுவருட விழாவை சுவிஸ் எஸ் கே டி நாதன் நடத்தினார்

துர்முகி புது வருட பிறப்பை முன்னிட்டு முதியோருக்கான கிராமிய விளையாட்டுப்போட்டியும் முதியோருக்கான புத்தாடை வழங்கும்
நிகழ்வும் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு, எஸ்.கே முதியோர் இல்லம் (எஸ்.கே.நாதன்) அவர்களின் பூரண அனுசரனையுடன் கிளி சாந்தபுரம். கலைமகள் வித்தியாலயத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெற்றது.
கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்நிகழ்வை இவ்வருடமும் பல முக்கிஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதேவேளை, இக்கிராமத்தில் வசிக்கும் சுமார் 110 முதியோர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக 2000 ரூபா பெறுமதியான உலர் உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
சுவிஸ் நாட்டை வசிப்பிடமாக கொண்ட எஸ்.கே.நாதன், இலவச திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்து வரும் நிலையில், பிள்ளைகளின் அரவணைப்பின்றி முதியோர் இல்லத்தில் வாழு(டு)ம் வயோதிபர்களை இப்புத்தாண்டு நன்னாளில் மகிழவைத்துள்ளார்.

ad

ad