புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2016

முதல்வரை சந்திக்கப் போகிறார்களா 33 தி.மு.க எம்.எல்.ஏக்கள்?' -நடப்பதை விளக்கும் நாஞ்சில் சம்பத்

றிவாலயத்தை அதிர வைத்திருக்கிறார் அ.தி.மு.க நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.
' தி.மு.கவிருந்து 33 எம்.எல்.ஏக்கள் அ.தி.மு.கவில் இணைய விருப்பம் தெரிவித்துக் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்' என மதுரை கூட்டத்தில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் சம்பத். 
சட்டமன்றத்தில் இருந்து தி.மு.க உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, ' சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு' என்ற தலைப்பில் தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறது தி.மு.க. இதற்குப் பதிலடி தரும் வகையில், நேற்று மதுரை, பழங்காநத்தத்தில் பிரமாண்டக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ.   'சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வை கண்டு தெரித்து ஓடும் சண்டிக்குதிரைகள்' என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், ' தமிழக சட்டப் பேரவையில் சிவசண்முகம் பிள்ளை, டாக்டர்.கிருஷ்ணாராவ், சி.பா.ஆதித்தனார், புலவர் கோவிந்தன், மதியழகன், விருதுநகர் பெ.சீனிவாசன், தமிழ்க் குடிமகன், பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், பி.எச்.பாண்டியன், முனு ஆதி, ராஜாராம், காளிமுத்து உள்பட ஏராளமான சான்றோர்கள், சபாநாயகர் பதவியை அலங்கரித்த வரலாறு உண்டு.
அந்த வரிசையில் சபாநாயகராக தனபால் வீற்றிருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மிகப் பெரிய பதவியைக் கொடுத்து அமர வைத்திக்கிறார் முதலமைச்சர். இப்படியொரு பதவியில் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் அமர வைக்கப்பட்டதை, அதிர்ச்சியோடு பார்க்கிறார் கருணாநிதி. அவரால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ரத்தம் சிந்தி பெற வேண்டிய பதவிகளை அம்மா எளிதாக வழங்கிவிட்டார். அதனால்தான், சட்டசபையில் அவரைக் கேலி செய்யும் வேலையில் தி.மு.கவினர் ஈடுபடுகின்றனர். இவர்களது செயலால் அம்மா புகழ்தான் ஓங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது அம்மாவை சந்திப்பதற்காக 33 தி.மு.க எம்.எல்.ஏக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களைக் காப்பாற்றிக் கொள்ளட்டும் கருணாநிதி. தி.மு.கவால் போட்டி சட்டசபையை மட்டுமே நடத்த முடியும். நிஜ சட்டசபையை அவர்களால் பிடிக்க முடியாது" என போகிறபோக்கில் கொளுத்திப் போட்டார். 
' தி.மு.க எம்.எல்.ஏக்கள் அ.தி.மு.க பக்கம் வருவது உண்மைதானா?' என்ற கேள்வியை நாஞ்சில் சம்பத்திடம் கேட்டோம். " சட்டமன்றத் தேர்தல் முடிந்தபிறகு, ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் பேட்டி கொடுத்த கருணாநிதி, ' அ.தி.மு.கவில் 12 எம்.எல்.ஏக்களை காப்பாற்றித் தக்க வைப்பது கடினம்' என்றார் கருணாநிதி. அவருடைய கட்சியில் இருந்து 33 பேர் வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகப் பேசினேன். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, ' தொகுதி பிரச்னைக்காக' முதல்வரை சந்திக்கும் முடிவில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் பலர் உள்ளனர். கருணாநிதி குடும்பத்தில் அவருக்கும் அவருடைய மகனுக்கும் இடையில் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. ஸ்டாலின் தலைமையை விரும்பாத எம்.எல்.ஏக்கள் பலர் அங்கு உள்ளனர். அவர்கள் அ.தி.மு.க பக்கம் வருவதையே விரும்புகின்றனர். இதைப் பற்றித்தான் மதுரை கூட்டத்தில் பேசினேன்" என்றார். 

ad

ad