புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2016

பசிலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட, நான்கு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இவர்களுக்கு எதிராக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி, குறித்த குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்யுமாறும் நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் வறுமையினைப் போக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட திவிநெகும திணைக்களத்தினால் 33 மில்லியன் ரூபா செலவில் வறிய மக்களுக்கு கூரைத் தகடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன்போது, அரசாங்க நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு அமைய, இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில், எதிராளி ஒருவர் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால், குற்றப்பத்திரிகை தாக்கல் பிற்போடப்பட்டுள்ளது.

ad

ad